ரூ.2,399 ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர பிளான், புதிய டேட்டா பேக்குகள் சலுகைகள் அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிதாக வருடாந்திர பிளான் ரூ.2,399 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் புதிய டேட்டா ஆட் ஆன் பேக்குகள் ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளது.

மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்றவை முறையே ரூ.2398 மற்றும் ரூ.2399 மதிப்புள்ள ரீசார்ஜ்களில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகையை 365 நாட்களுக்கு வழங்கி வருகின்றது. இந்நிலையில் ரூ.2121 மதிப்பிலான திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா சலுகையை ஜியோ வழங்குவது குறிப்பிடதக்கதாகும்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.2,399 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு தினமும் 2ஜிபி டேட்டா, ஜியோ டூ ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க் அழைப்புகள் 12,000 நிமிடங்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் என 365 நாட்கள் வேலிடிட்டி காலத்தை வழங்குகின்றது.

புதிய டேட்டா ஆட்-ஆன் பேக்குகள்

வீட்டிலிருந்து பணிபுரியும் ஜியோ பயனாளர்களுக்கு என பிரத்தியேகமான ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 திட்டங்களை அறிவித்துள்ளது. முன்பாக இது போன்ற பிளான்கள் ரூ.11, ரூ.21, ரூ.51, ரூ.101 ஆகியவை உள்ளது.

ரூ.151 டேட்டா திட்டத்தில் மொத்தமாக தினசரி வரம்பின்றி 30ஜிபி டேட்டா வழங்க உள்ளது.

ரூ.201 டேட்டா 4ஜி பேக்கில் மொத்தமாக தினசரி வரம்பின்றி 40ஜிபி டேட்டா வழங்க உள்ளது.

ரூ.251 திட்டத்தில் இரு மாதிரியாக கிடைக்கின்றது. ஒன்று முன்பாக கிடைத்து வரும் 51 நாட்களுக்கான பிளானில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவும், இப்போது வந்துள்ள ரூ.251-ல் முன்பாக உள்ள பிளானுடன் கூடுதலாக 50 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.