ஜியோ 4ஜி நிறுவனம் சாம்சங் கேலக்சி எம்10 மற்றும் சாம்சங் கேலக்சி எம்20 பயனாளர்களுக்கு மட்டும் டபுள் டேட்டா ஆஃபரை அறிவித்துள்ளது.

இந்திய மொபைல் போன் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சாம்சங் எம் சீரிஸ் பயனாளர்களுக்கு என ஜியோ நிறுவனம் இரு பிளானகளில் டேட்டா சலுகை நன்மையை இரட்டிப்பாக வழங்க உள்ளது.

நேற்று முதன்முறையாக அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு சாம்சங் கேலக்ஸி எம் 10 மற்றும் கேலக்ஸி எம் 20 மொபைல்கள் விற்று தீர்ந்துள்ளது. அடுத்த விற்பனை பிப்ரவரி 7ந் தேதி பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்நிலையில் ஜியோ நிறுவனம் எம்20 மற்றும் எம்10 மொபைல்களில் ஜியோ சிம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ரூ.198 மற்றும் ரூ.299 ஆகிய இரு பிளான்களில் டேட்டா நன்மையை இரட்டிப்பாக வழங்க உள்ளது.

தற்போது பொதுவாக பயனாளர்களுக்கு ரூ.198-க்கு ப்ரீபெய்டு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2 ஜிபி டேட்டா, அழைப்பு நன்மையும், ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 3 ஜிபி டேட்டா, அழைப்பு நன்மை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை கேலக்ஸி எஃம் சீரிஸ் பயனாளர்கள் மேற்கொள்ளும் போது ரூ.198 க்கு ரீசார்ஜ் செய்தால் 4ஜிபி டேட்டாவும், ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்தால் 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரட்டிப்பு டேட்டா நன்மை முதல் 10 ரீசார்ஜ் திட்டங்களுக்கு மட்டும் கிடைக்க உள்ளது. கூடுதல் டேட்டா நன்மையை மை ஜியோ ஆப் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் டேட்டா நன்மையை வழங்கிய மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

சாம்சங் கேலக்ஸி M சீரிஸ் விலை பட்டியல்

சாம்சங் கேலக்ஸி M10  2 GB / 16 GB – ரூ.7,990

சாம்சங் கேலக்ஸி M10  3 GB / 32 GB – ரூ.8,990

சாம்சங் கேலக்ஸி M20  3 GB / 32 GB – ரூ.10,990

சாம்சங் கேலக்ஸி M20  4 GB / 64 GB – ரூ.12,990

கேலக்ஸி எம் சீரிஸ் மொபைல் அறிமுகத்தால் சியோமி ரெட்மி மொபைல் போன்களுக்கு அதிகபட்சமாக ரூ.2500 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.