ஏர்டெல் டெலிகாமை வீழ்த்தி ரிலையன்ஸ் ஜியோ

ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ரிலையன்ஸ் ஜியோ இரண்டாம் இடத்தை பெற்று மொத்தமாக 30.6 கோடி பயனாளர்களை டெலிகாம் சந்தையில் பெற்றுள்ளது. முதலிடத்தில் தொடர்ந்து வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் விளங்குகின்றது.

கடந்த டிசம்பர் 2018 மாத முடிவில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.4 கோடியாக இருந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு ஏர்டெல் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நெ.2 இடத்தில் ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் மிகப்பெரிய 4ஜி வழங்குநராக விளங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம், சமீபத்தில் 30 கோடி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கடந்தது.

கடந்த 2018 டிசம்பர் மாத முடிவில் ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், தனது வாடிக்கையாளர் எண்ணிக்கை 28.4 கோடியாக இருந்த விபரத்தை வழங்கியுள்ளது. ஆனால் நடப்பு ஆண்டில் ஏர்டெல் தொடர்ந்து குறைந்த எண்ணிக்கை வாடிக்கையாளர்களை மட்டும் இணைத்து வருகின்றது. வோடபோன் ஐடியா நிறுவனம் டிசம்பர் இறுதியில் 38.7 கோடி பயனாளர்களை கொண்டிருந்தது.

ஆனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 2019 ஆம் ஆண்டின் தொடக்க மூன்று மாதங்களில் 2.7 கோடி பயனாளர்களை பெற்றுள்ளது. எனவே, சமீபத்தில் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை 30.6 கோடியாக உயர்த்தியுள்ளது.

கடந்த 19 ஆண்டுகளாக ஏர்டெல் நிறுவனம் , இந்தியாவின் முதன்மையான நிறுவனம் என்ற பெருமையை வகித்து வந்த ஏர்டெல் , வோடபோன் ஐடியா இனைப்பிற்கு பிறகு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது ஜியோவின் வளர்ச்சி காரணமாக மூன்றாம் இடத்திற்கு ஏர்டெல் சரிந்துள்ளது. முதன்மையான இடத்தில் தொடர்ந்து வோடபோன் ஐடியா விளங்குகின்றது.