ஜியோபோனுக்கு எதிராக களமிறங்யுள்ள நிறுவனங்களில் 4ஜி வசதி கொண்ட ஐடியா 4ஜி மொபைலில் என்னென்ன வசதிகள் எதிர்பார்க்கலாம் என்ற முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஐடியா போன்

ரூ. 1500 டெபாசிட் தொகையுடன் இலவசமாக வழங்கப்பட உள்ள 4ஜி வசதி பெற்ற ஃபீச்சர் போனை ஜியோபோன் என்ற பிராண்டில் அறிமுகம் செய்துள்ள நிலையில், இதற்கு எதிராக ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் தயாராகி வருகின்றது.

ஜியோபோனை போன்று வரையறுக்கப்பட்ட ஆப்ஸ்கள் போல இல்லாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள் போன்ற ஆப்ஸ்களை செயல்படுத்தும் வகையிலும் ஆண்ட்ராய்டு அடிப்படையிலே ஃபீச்சர் போனை ஐடியா வடிவமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ.1500 விலை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்ட ஜியோபோனை விட விலை கூடுதலாக ரூ.1000 வரை இருக்கும் என சமீபத்தில் ஐடியா நிர்வாக இயக்குநர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதனால் உறுதியாக கூடுதலான அம்சங்களை கொண்டதாக பல்வேறு சிறப்பு பன்டில் ஆஃபர்களை பெற்றதாக இருக்கும்.

ஜியோ பீச்சர் போனில் ஃபயர்பாக்ஸ் இயங்குதளத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்ட கெய் ஒஎஸ் இயங்குதளத்தில் ஜியோ ஆப்ஸ்கள் மட்டுமல்லாமல், டிஜிட்டல் பேமென்ட்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டிருந்தாலும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற மிக முக்கியமான ஆப்ஸ்களை வழங்கவில்லை.

ஆனால் ஐடியா நிறுவனம் தயாரிக்க உள்ள மொபைலில் அடிப்படையான மற்றும் டெக் உலகின் முன்னணி செயலிகளான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் , டிவிட்டர் போன்றவற்றுடன் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி போன்ற சேவைகளை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மொபைல்களுக்கு விலை குறைந்த டேட்டா பிளான்கள் மற்றும் வரம்பற்ற அழைப்புகள் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.