594 ரூபாய்க்கு 6 மாதம் வேலிடிட்டி ரீசார்ஜ் பிளான் : ஜியோ போன்

பீச்சர் ரக ஸ்மார்ட் ஜியோ போன் மாடல்களுக்கு என பிரத்தியேகமான இரு நீண்ட வேலிடிட்டி கொண்ட பிளானை ஜியோபோன் பயனாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. 594 ரூபாய்க்கு 6 மாதம் வேலிடிட்டியை வழங்குகின்றது.

ஜியோபோன் ரூ.594

ஜியோ நிறுவனம் , சாதாரன மொபைல்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுடன் இணையத்தை விரைவாக பயன்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மொபைலில் ஜியோ நிறுவனத்தின் ஜியோ டிவி, ஜியோ மியூசிங், ஜியோ மூவிஸ் போன்றவற்றையும் பெற்றுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ரூ.594 கட்டணத்திலான ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 500MB டேட்டா அதாவது 0.5ஜிபி டேட்டா வழங்குகின்றது. இந்த பிளானில் வழக்கம்போல வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் , இலவச ரோமிங் உட்பட 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றது.

ஜியோபோனுக்கு மட்டும் செல்லுபடியாகின்ற ரூ.594 ரீசார்ஜ் பிளானில் பயனாளர்கள் 6 மாதம் வேலிடிட்டியை பெறலாம்.

594 ரூபாய்க்கு 6 மாதம் வேலிடிட்டி ரீசார்ஜ் பிளான் : ஜியோ போன்

ஜியோபோன் ரூ.297

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ரூ.297 கட்டணத்திலான மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 500MB டேட்டா அல்லது 0.5ஜிபி டேட்டா வழங்குகின்றது. இந்த பிளானில் வழக்கம்போல வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் , இலவச ரோமிங் உட்பட 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றது.

ஜியோபோனுக்கு மட்டுமே செல்லுபடியாகின்ற ரூ.297 ரீசார்ஜ் பிளானில் பயனாளர்கள் 3 மாதம் (84 நாட்கள்) வேலிடிட்டியை பெறலாம்.

594 ரூபாய்க்கு 6 மாதம் வேலிடிட்டி ரீசார்ஜ் பிளான் : ஜியோ போன்

ஜியோபோன் ரீசார்ஜ் பிளான்

ஜியோ போன் பயனாளர்களுக்கு ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 பிளான்கள் விபரம் பின் வருமாறு ;-

ரூ.49 பிளானில் மொத்தமாக 1ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது.

ரூ.99 பிளானில் நாள் தோறும் 0.5 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றது.

ரூ.153 பிளானில் தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகின்றது. வழங்குகின்றது.

அனைத்து பிளான்களும் ஜியோபோன் வாடிக்கையாளர்கள் மட்டும் பெற்றுக்கொள்ள இயலும். மற்ற மொபைல் பயனாளர்களுக்கு இந்த சலுகை கிடைக்கப் பெறாது.

594 ரூபாய்க்கு 6 மாதம் வேலிடிட்டி ரீசார்ஜ் பிளான் : ஜியோ போன்