ஜியோ பிளாட்ஃபாரத்தில் ரூ.1,894.50 முதலீடு செய்யும் இன்டெல்

ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபாரத்தில் 12வது முதலீடாக முன்னணி இன்டெல் கேபிட்டல் நிறுவனம் ரூ.1,894.50 கோடி மூலம் 0.39 சதவீத பங்களுகளில் முதலீட்டை மேற்கொண்டுள்ளது. ஜியோ நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகளின் மொத்த மதிப்பு ரூ.1,17,588.45 கோடி ஆகும்.

தற்போது முதலீடு செய்திருக்கும் இன்டெல் நிறுவனத்தின் 1.894.5 கோடி ரூபாயையும் சேர்த்து, ஜியோ பிளாட்ஃபாரத்தில் முன்பாக முதலீடு செய்த பேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ் (இருமுறை), விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர், முபடாலா, ஏ.டி.ஐ.ஏ, டி.பி.ஜி, எல் கேட்டர்டன், பி.ஐ.எஃப் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப முதலீட்டாளர்களிடமிருந்து மொத்தமாக ரூ.1,17,588.45 கோடி நிதியை ரிலையன்ஸ் திரட்டியுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட முதலீட்டை தொடர்ந்து ஜியோ பிளாட்ஃபாத்தின் மதிப்பு ரூ.4.91 லட்சம் கோடி மற்றும் நிறுவன மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடி என மதிப்பிடுகிறது. இதுவரை உலகின் எந்தவொரு நிறுவனமும் தொடர்ச்சியாக திரட்டி நிதியில், இதுவே உலகின் மிகப்பெரிய நிதி திரட்டல் ஆகும்.