Jio-vs-compete

4ஜி இணைய சேவை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் முதன்மையான மற்றும் அதிவேகத்தில் வழங்குவதில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்றது. 3ஜி சேவை வழங்குவதில் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் முதலிடத்தில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் இணைய வேகம் ஜூலை மாதத்தில் சராசரியாக ஒரு வினாடிக்கு 21 மெகாபைட் (mbps) டவுன்லோட் வேகமாக பதிவு செய்து முதன்மையான நிறுவனமாக விளங்குகின்றது. அதே சமயம், வோடபோன் அப்லோடு வேகத்தைப் பொறுத்தவரை தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 4ஜி டவுன்லோடு வேகத்தில் 17.6 Mbps வேகத்தில் பதிவு செய்திருந்த நிலையில், ஜியோவின் இணைய வேகம் 21 mbps வேகத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள வேக அட்டவணையில், ஏர்டெல் நெட்வொர்க் சராசரியாக 8.8 Mbps பதிவிறக்கம் வேகத்தையும், வோடபோன் 7.7 Mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும், ஐடியா செல்லுலார் 6.6 Mbps வேகத்தையும் வழங்குகின்றது.

ஜூலை மாத முடிவில் 3ஜி சேவையில் சராசரியாக 2.5 Mbps டவுண்லோடு வேகத்தை பி.எஸ்.என்.எல் வழங்கி முதலிடத்தையும், அதனை தொடர்ந்து, ஐடியா  2 Mbps சராசரி பதிவிறக்க வேகத்துடன், வோடபோன் 1.9 Mbps வேகமும், இறுதியாக ஏர்டெல் நெட்வொர்க் 3ஜி டவுண்லோடு ஸ்பீடு 1.4 Mbps ஆக உள்ளது.

அப்லோடு ஸ்பீடில் வோடபோன் முதலிடம்

வோடபோன் டெலிகாம் நிறுவனம் ஜூலை மாதத்தில் சராசரியாக 5.8 Mbps வேகத்துடன் 4ஜி அப்லோடு வேகத்தில் முதன்மையாக விளங்குகின்றது. ஐடியா செல்லுலார் 5.3 Mbps பதிவேற்ற வேகத்துடன் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் ஜியோ 4.3 Mbps வேகத்தையும், இறுதியாக ஏர்டெல் 3.2 Mbps அப்லோடு வேகத்தை வழங்குகின்றது.

பிஎஸ்என்எல், வோடபோன் மற்றும் ஐடியா என மூன்று நிறுவனங்களும் ஜூலை மாதத்தில் 3ஜி நெட்வொர்க்கில் சராசரியாக 1.2 mbps பதிவேற்ற வேகத்தை பதிவு செய்துள்ளன. ஏர்டெல் 0.6 mbps என மிக குறைந்த பதிவேற்ற வேகத்தை பதிவு செய்தது.