ஜியோ Vs வோடோபோன் Vs ஏர்டெல் Vs ஐடியா : டேட்டா சண்டை

ஏப்ரல் 1 முதல் கட்டண சேவைக்கு மாறியுள்ள ஜியோ சேவை வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளுமா ? என்பதில் சந்தேகமே எழுந்துள்ளது. ஜியோ Vs வோடோபோன் Vs ஏர்டெல் : டேட்டா ஒப்பீடு செய்து எது பெஸ்ட் சாய்ஸ் என அறிந்து கொள்ளலாம்.

ஜியோ Vs வோடோபோன் Vs ஏர்டெல் Vs ஐடியா

4ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான சலுகைகளை ஜியோ போட்டியை சமாளிக்க வோடாபோன் ,ஏர்ட்ல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் வழங்கி உள்ள சலுகைகளை மற்றும் கட்டண விபரங்களை அறிவோம்.. எந்த டேட்டா பிளான் பெஸ்ட் என அறிந்து கொள்ளலாம்.

ஜியோ ப்ரைம்

ஜியோ ப்ரைம் திட்டத்தில் ரூ.99 கொண்டு இணையும்பொழுது 1 வருடத்திற்கு மாதந்தோறும் ரூ.303 கட்டணத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் அடுத்த ஒரு வருடத்திற்கு வழங்க உள்ளது.

வோடாபோன்

வோடாபோன் நிறுவனம் தினமும் 1ஜிபி டேட்டா உடன் கூடுதலாக வரம்பற்ற கால்கள் 28 நாட்களுக்கு ரூ. 342 கட்டணத்தில் வழங்க உள்ளது. மேலும் 500 MB டேட்டா பகலிலும் இரவிலும் 500MB டேட்டா வழங்க உள்ளது.

ஏர்டெல்

இதற்கு சவால் விடுக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 346 கட்டணத்தில் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் தர உள்ளது. இதுதவிர ரூ.149 கட்டணத்தில் 2ஜிபி டேட்டா ஏர்டெல் எண்களுக்கு இலவச அழைப்புகளும் கூடுதலாக 2ஜிபி டேட்டா வழங்க உள்ளது.

ஐடியா

ஐடியா வாடிக்கையாளர்கள் ரூ.345 கட்டணத்தில் 14ஜிபி டேட்டா வழங்குகின்றது. தினமும் 500MB டேட்டா வழங்குகின்றது. மேலும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது.

ஒப்பீடு பார்வை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You