ஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் Vs ஐடியா : பெஸ்ட் 4ஜி டேட்டா பிளான்

இந்தியாவில் 4ஜி நெட்வொர்க்குகள் மிக கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் பல்வேறு புதிய டேட்டா பிளான்களை சவாலான விலையில் அறிமுகம் செய்துள்ளன.

பெஸ்ட் டேட்டா பிளான்

ஜியோ வருகைக்கு பின்னர் டேட்டா விலை மிக கடுமையாக சரிவினை சந்தித்துள்ள நிலையில் தற்போது ஜியோ நிறுவனம் தன்னுடைய பிரைம் மெம்பர்ஷீப் பயனர்களுக்கு புதிய பிளான்களை வழங்கியுள்ளது. இதற்கு போட்டியாக மற்ற நெட்வொர்க்குகளும் புதிய பிளான்களை வெளியிட்டுள்ளன.

ஜியோ 399

ரூ.399 கட்டணத்தில் புதிய தன் தனா தன் பிளானில் 84 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் உள்ளிட்ட எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ அப் பயன்பாடுகளை பெறலாம்.

ஏர்டெல் 799

ஏர்டெல் நிறுவனம் 28 நாட்கள் வேலிடிட்டி பெற்ற பிளானில் தினமும் 3ஜிபி டேட்டா 2ஜி/3ஜி/4ஜி என மூன்று நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகின்றது. கூடுதலாக வரம்பற்ற உள்ளூர் மற்றும் அழைப்புகளை பெறலாம்.

பெரும்பாலும் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய மை ஏர்டெல் செயலில் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனியான டேட்டா பிளான்களை வழங்கின்றது. எனவே மை ஏர்டெல் ஆப் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வோடஃபோன் 244

சமீபத்தில் வோடஃபோன் நிறுவனம் தன்னுடைய புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ. 244 கட்டணத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி பெற்ற இந்த புதிய பேக்கினை மை வோடஃபோன் ஆப் வழியாக பெறலாம். இந்த பிளானில் தினமும் ஒரு ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் வோடபோன் அழைப்புகள் வழங்குகின்றது. மற்ற நெட்வொர்க்குகளுக்கு உங்கள் பிளானின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த திட்டத்தில் சிறப்பு சலுகையாக 5 சதவிகித கேஸ்பேக் சலுகையை வோடஃபோன் வழங்குகின்றது. அதாவது ரூ.9.70 டாக்டைம் வழங்குகின்றது. மேலே வழங்கப்பட்டுள்ள சலுகை 3ஜி மற்றும் 4ஜி வாடிக்கையாளர்கள் முதன்முறையாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 70 நாட்கள் மற்றவர்களுக்கு 35 நாட்கள் மட்டுமே கிடைக்கும்.

பிளான் ரூ. 346 கட்டணத்தில் தினமும் 1ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்கப்பட்டு 56 நாட்கள் கால அளவு என வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் என எந்த நெட்வொர்க் அழைப்புகளுக்கும், தினசரி அதிகபட்சமாக 300 நிமிடம் மற்றும் ஆனால் வாரத்திற்கு அதிகபட்சமாக 1200 நிமிடம் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்திலும் சிறப்பு சலுகையாக 5 சதவிகித கேஸ்பேக் சலுகையை வோடஃபோன் வழங்குகின்றது. அதாவது ரூ.17.30 டாக்டைம் வழங்குகின்றது.

ஐடியா பிளான்

ஐடியா நிறுவனத்தின் மாநில வாரியாக மாறுபட்ட பிளான்களை வழங்குகின்றது. மேலும் ஐடியா ஆப் வாயிலாக ரூ.348 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் வழங்குகின்றது. மை ஐடியா ஆப் வாயலாக மேலும் பல்வேறு திட்டங்களை பற்றி தகவலை பெறலாம்.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பல்வேறு விதமான மாறுபட்ட சலுகைகள் மற்றும் பிளான்கள் வழங்கப்பட்டாலும், ஜியோ வழங்குகின்ற சலுகைகளுக்கு இணையாகவே இருந்தாலும் , குறைந்த நிபந்தைனகள் மற்றும் குறிப்பிட்ட வாடிக்கையாளர் என எந்த கட்டுப்பாடு இல்லாமல் வழங்குகின்றது.

Recommended For You