jio

இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனம் ஜியோ வெளியிட்டுள்ள போஸ்ட்பெயிட் பிளஸ் திட்டத்திற்கு போட்டியாக வி (Vi – வோடபோன் ஐடியா) மற்றும் ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் பிளான்களை ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்ட்பெயிட் பிளஸ் திட்டத்தில் பெரும்பாலான முன்னணி ஓடிடி சேவைகள் மற்றும் இலவச சர்வதேச ரோமிங் உட்பட அழைப்புகள் மற்றும் குறைந்த கட்டணத்திலான சர்வதேச அழைப்புகளை வழங்குகின்றது. இதற்கு சவால் விடுக்கும் வகையில் போட்டியாளர்களான வி மற்றும் ஏர்டெல் பிளான்களை காணலாம்.

vodafone-idea-rebranded-as-vi

ஜியோ Vs வி Vs ஏர்டெல் – போஸ்ட்பெயிட் பிளான்

பொதுவாக மூன்று தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் போன்றவற்றையும், ஜியோ நிறுவனம் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ சவான் சேவைகளையும், வி டெலிகாம் தனது பயனார்களுக்கு வி டிவி மற்றும் மூவிஸ் சேவையும், மற்றும் ஏர்டெல் எக்ஸ்டீரிம் சேவையை வழங்குகின்றது. மற்றபடி டேட்டா ரோல்ஓவர், குடும்பத்திற்கு ஏற்ற பிளான்கள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவையை வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ விளங்குகின்றது.

ஏர்டெல் டெலிகாம்

ஜியோ திட்டங்கள் ரூ.199 முதல் துவங்கி ரூ.399, ரூ.599, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ.1499 வரை கிடைக்கின்றது.

ஏர்டெல் நிறுவனம் ரூ.499, ரூ.749, ரூ.999 மற்றும் ரூ.1599 போன்றவற்றை வழங்குகின்றது.

வோடபோன் ஐடியா தனது போஸ்ட்பெயிட் பயனாளர்களுக்கு ரூ.399, ரூ.499, ரூ.598, ரூ.699, ரூ.749, ரூ,999 மற்றும் ரூ.1099 வரை வழங்குகின்றது.

மூன்று நிறுவனங்களின் ஒப்பீட்டு அட்டவனை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஜியோ Vs வி Vs ஏர்டெல் - சிறந்த போஸ்ட்பெயிட் பிளான் எது ?