உலகின் சிறந்த மொபைல் ஆப்ரேட்டர் : ரிலையன்ஸ் ஜியோ

சர்வதேச மொபைல் விருதுகள் 2018 பட்டியிலில் சிறந்த நுகர்வோர் சேவையை வழங்கும் மொபைல் ஆப்ரேட்டர் (Best Mobile Operator Service for Consumers) என்ற விருதினை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 அரங்கில் வென்றுள்ளது.

சிறந்த மொபைல் ஆப்ரேட்டர் : ரிலையன்ஸ் ஜியோ

முகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நிறுவனம் இந்திய டெலிகாம் துறை மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் டெலிகாம் துறையில் மிக அதிரடியான சாதனைகளை படைத்து வரும் நிறுவனமாக விளங்குகின்றது.

கடந்த செப்டம்பர் 2016-யில் பொதுமக்கள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ 4ஜி நிறுவனம் வழங்கிய பல்வேறு இலவச டேட்டா சலுகைகள் மற்றும் வரம்பற்ற உள்ளூர் , வெளியூர் அழைப்புகள் ஆகியவற்றுடன் ரோமிங் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கட்டண சேவைக்கு மாறிய பிறகு தொடர்ந்து சவாலான விலையில் கூடுதல் டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வருகின்றது.

160 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று விளங்கும் ஜியோ அறிமுகப்படுத்தி சேவைகள் இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான (Best Mobile Operator Service for Consumers) சேவையை வழங்குவது ஜியோ சிறந்த ஆப்ரேட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர ஜியோ நிறுவனத்தின் ஜியோ டிவி ஆப் சேவை சிறந்த மொபைல் வீடியோ கன்டென்ட் (Best Mobile Video Content) பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You