jiophone

ஜியோ நிறுவனத்தின் ஃபீச்சர் ரக மொபைல் மாடலான ஜியோபோன் , ஜியோபோன் 2 வாடிக்கையாளர்களுக்கான ஆல் இன் ஒன் ஆரம்ப கட்டண பிளான் ரூ.75 முதல் தொடங்குகின்றது. முன்பாக இருந்து வந்த குறைந்த விலை ரூ.49 பிளான் நீக்கப்பட்டுள்ளது.

ஜியோ போன் பயனாளர்களுக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த மிக குறைந்த விலை ரீசார்ஜ் பிளான் மாடலான ரூ. 49 திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது. தற்போது மற்ற ப்ரீபெய்டு பிளான்களும் உயர்த்தப்பட்ட நிலையில் ஜியோபோன் ஆல் இன் ஒன் பிளான் ரூ.75 முதல் அதிகபட்சமாக ரூ.185 வரை கிடைக்கின்றது. மற்ற பிளான்கள் ரூ.99 தொடங்கி அதிகபட்சமாக 168 நாட்களுக்கான ரூ.597 பிளான் வரை கிடைக்கின்ற இந்த பிளான்களில் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு ஐயூசி டாப் அப் ரூ.10 முதல் மேற்கொள்ள வேண்டும்.

ஜியோபோன் ஆல் இன் ஒன் பிளான் விபரம்

ரூ. 75 ஜியோபோன் மொபைலுக்கான பிளானில் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஆன்-நெட் அழைப்புகள் 300 நிமிடம், நாள் ஒன்றுக்கு 0.1 ஜிபி டேட்டா என மொத்தமாக 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு 28 நாட்களுக்கு மட்டும் செல்லும் வகையில் உள்ளது.

ரூ. 125 ஜியோபோனுக்கான பிளானில் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஆன்-நெட் அழைப்புகள் 500 நிமிடம், நாள் ஒன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா என மொத்தமாக 14 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு, வேலிடிட்டி 28 நாட்கள் என குறிப்பிடப்படுகின்றது .

ரூ. 175 ஆல் இன் ஒன் பிளானில் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஆன்-நெட் அழைப்புகள் 500 நிமிடம், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா என மொத்தமாக 28 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

ரூ. 185 ஆல் இன் ஒன் பிளானில் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஆன்-நெட் அழைப்புகள் 500 நிமிடம், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா என மொத்தமாக 56 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு 28 நாட்களுக்கு மட்டும்.

Jiophone-new-all-in-one-plans

 

மற்ற ஜியோ போன் பிளான்கள்

ரூ.99 ரீசார்ஜ் பிளானில் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா என மொத்தமாக 14 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு 28 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.153 ரீசார்ஜ் பிளானில் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா என மொத்தமாக 42 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு 28 நாட்கள் மட்டும் கிடைக்கும்.

ரூ.297 ரீசார்ஜ் பிளானில் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா என மொத்தமாக 42 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு 84 நாட்களுக்கு கிடைக்கின்றது.

ரூ.594 ரீசார்ஜ் பிளானில் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா என மொத்தமாக 84 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு அதிகபட்சமாக 168 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கின்றது.

ஜியோபோன் மாடலுக்கான ஆல் இன் ஒன் பிளான்களின் FUP வரம்பை கடந்த பிறகும், மற்ற பிளான்களில் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும். எனவே, இந்த பிளான்களில் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு ஐயூசி டாப் அப் ரூ.10 முதல் ரூ.1000 வரை மேற்கொள்ளலாம்.

ரூ.49 பிளான் நீக்கம்.., ரூ.75 முதல் ஜியோபோன் ஆல் இன் ஒன் பிளான் ஆரம்பம்