jiophone

ஃபீச்சர் ரக மொபைல் போன் மாடலான ரிலையன்ஸ் ஜியோபோன் மொபைலுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.49 பிளான் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் வேலிடிட்டி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக ரூ. 69 என குறைந்த விலை திட்டத்தையும் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டில் புதிய பிளான் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீக்கப்பட்டிருந்த ரூ.49 ஜியோபோன் பிளான் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் வேலிடிட்டி 14 நாட்களாக குறைந்துள்ளது.

ஜியோபோனுக்கு வழங்குகின்ற சலுகைககளின் முழுவிபரம் பின் வருமாறு..

ஜியோபோன் ரூ.49 பிளான்

முன்பாக 28 நாட்கள் வழங்கப்பட்ட ரூ.49 பிளானுக்கு இப்போது 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

டேட்டா – மொத்தமாக 2 ஜிபி உயர் வேக டேட்டா

அழைப்புகள் – ஜியோ டூ ஜியோ முற்றிலும் இலவசம் , ஜியோ டூ மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு 250 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது.

எஸ்எம்எஸ் – 25 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.

புதிய ஜியோபோன் ரூ.69 பிளான்

முன்பாக இந்த திட்டம் வழங்கப்படவில்லை இப்போது 14 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது.

டேட்டா – மொத்தமாக 7 ஜிபி உயர் வேக டேட்டா

அழைப்புகள் – ஜியோ டூ ஜியோ முற்றிலும் இலவசம் , ஜியோ டூ மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு 250 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது.

எஸ்எம்எஸ் – 25 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.

சமீபத்தில் இந்நிறுவனம் வழங்கி வந்த ரூ.2020 வருடாந்திர பிளான் இப்போது ரூ.2121 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.