இந்தியாவின் முன்னணி 4ஜி நெட்வொர்க் வழங்குநராக விளங்கும் முகேசு அம்பானி கீழ் செயல்படும் ஜியோ 4ஜி நிறுவனத்தின் ஜியோ ஃபுட்பால் கேஸ்பேக் ஆஃபரின் அடிப்பையில் ஜிவி எனர்ஜி 3 மொபைலை வாங்கினால் ரூ.699 விலை என கிடைக்கப்பெறும்.

ஜிவி 4ஜி ஸ்மார்ட்போன்

குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் Jivi மொபைல்ஸ் நிறுவனம் ஜியோ நிறுவனத்தின் ஃபுட்பால் ஆஃபரில் மொத்தம் 22 மொபைல் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பல்வேறு மொபைல்களுக்கு அதிரடியான ரூ.2200 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குகின்றது.

ரூ.2899 விலையில் கிடைக்கின்ற ஜிவி எனர்ஜி E3 ஸ்மார்ட்போன் இரட்டை 4ஜி சிம் கார்டு ஆதரவுடன், 4 அங்குல திரை பெற்று 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா பின்புறத்தில் வழங்கப்பட்டு முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களுக்கு 2 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு கேஸ்பேக் திட்டம், ரூ.198 அல்லது ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு ரீசார்ஜ் சமயத்திலும் ரூ.50 மதிப்பிலான 44 கேஸ் வவுச்சர்கள் மை ஜியோ அப்ளிகேஷனில் அளிக்கப்படும். இதனை மை ஜியோ ஆப் மூலம் அடுத்தடுத்த ரீசார்ஜ் செய்யும்போது பயன்படுத்தி ரூ.50 சலுகை பெறலாம்.

பிப்ரவரி 15ஆம் தேதி அல்லது அதற்குப் பின் ஜியோ சேவையில் இணைந்த வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய ஜியோ இணைப்பு பெறுபவர்கள் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு தொகைக்கு ரீசார்ஜ் செய்து இந்த சலுகையைப் பெற இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.2200 வரை கேஸ்பேக் கிடைக்கப்பெறுவதனால் ஜிவி எனர்ஜி 3 மொபைல் விலை ரூ.699 மட்டுமே ஆகும்.

இந்த சிறப்பு கேஷ்பேக் சலுகையை பயன்படுத்தாமல் மீதி தொகையை வைத்திருந்தால், மே 31, 2022 உடன் காலாவதி ஆகிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.