அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா கட்டணம் எவ்வளவு தெரியுமா..!

தென்கொரியா நாட்டில் முதன்முறையாக உலகின் முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டு 5ஜி டேட்டா கட்டணம்  விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக கொரியாவில் அன்லிமிட்டெட் டேட்டா திட்டம் செயற்படுத்தப்பட்டாலும், டேட்டா பகிர்வது மட்டும் வரம்புமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி இந்நாட்டில் 5ஜி சேவை தொடங்கப்பட்டு முறைப்படி பயன்பாட்டு வந்துள்ளது. மேலும் இந்நாட்டில் உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

5ஜி டேட்டா விலை விபரம்

தென்கொரியாவில் தொலைத்தொடர்பு சேவை வழங்கி வருகின்ற எஸ்கே டெலிகாம், கொரியா டெலிகாம் மற்றும் எல்ஜி யூபிளஸ் ஆகிய மூன்றும் ஏப்ரல் 5 ஆம் தேதி சியோல் நகரில் நடந்த நிகழ்ச்சியில் 5G நெட்வொர்க் சேவையைத் தொடங்கியுள்ளன.

அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா கட்டணம் எவ்வளவு தெரியுமா..!

கொரியா டெலிகாம் அல்லது KT  என அழைக்கப்படுகின்ற நிறுவனம், 5 அற்புதமான 5G டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் விபரம் பின் வருமாறு.

5G Super Plan Basic – 5ஜி சூப்பர் பிளான் பேசிக் என வெளியிடப்பட்டுள்ள திட்டத்தில் வரம்பற்ற மொபைல் டேட்டா மற்றும் பகிரும் முறையான tethering வாயிலாக 5ஜிபி மட்டும் வழங்கப்பட்டு இந்த பிளான் தென்கொரியா வான் விலை 80,000 ( இந்திய மதிப்பில் ரூ.4,850)

5G Super Plan Special – வரம்பற்ற மொபைல் டேட்டா மற்றும் பகிரும் முறையான tethering வாயிலாக 50 ஜிபி மட்டும் வழங்கப்பட்ட பிளான் தென்கொரியா வான் விலை 1,00,000 ( இந்திய மதிப்பில் ரூ.6070)

5G Super Plan premium – வரம்பற்ற மொபைல் டேட்டா மற்றும் பகிரும் முறையான tethering வாயிலாக 50 ஜிபி மட்டும் வழங்கப்பட்டுள்ள பிளானின் தென்கொரியா வான் விலை 1,30,000 ( இந்திய மதிப்பில் ரூ.7,900)

5G Slim tariff – குறைந்த விலை டேட்டா திட்டமாக கருதப்படுகின்ற இந்த பிளானில் 8 ஜிபி உயர் வேக 5ஜி டேட்டா வழங்கப்படும். இந்த பிளான் விலை 55,000 ( இந்திய மதிப்பில் ரூ.3,350)

தென்கொரியா வான் மதிப்பில் உள்ள கட்டண விபரத்தை நாம் சுலபமாக அறிந்து கொள்ள இந்திய ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை எப்போது

நடப்பு ஆண்டின் மத்தியில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை அரசு தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 5ஜி தொடர்பான முதற்கட்ட சோதனை அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களிலும், முழுமையான பயன்பாட்டை பெறுவதற்கு 2020 ஆம் ஆண்டின் இறுதியில் கிடைகபலாம்.