பக்தர்களுக்கு கும்பமேளா ஜியோபோன் சேவை அறிமுகம்

பிரியாகராஜ் என்ற புதிய பெயருடன் அழைக்கப்படுகின்ற அலகாபாத் பிரயாக்கில் நடைபெற உள்ள கும்பமேளா 2019 விழாவை முன்னிட்டு ஜியோ நிறுவனம் Kumbh ஜியோபோன் சேவையை பயனாளர்களுக்கு வெளியிட்டுள்ளது.

Kumbh ஜியோபோன்

உலகிலே மிக அதிக மக்கள் கூடுகின்ற நிகழ்வாக கருதப்படுகின்ற கும்பமேளாவிற்கு ரூ.4300 கோடி செலவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விழாவிற்கு 13 கோடி பக்தர்கள் வரை வருகை புரிவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என பிரகடனம் செய்யப்படுகின்ற கும்பமேளா விழாவை முன்னிட்டு,  ஜனவரி 14-ம் நாள் மகர சங்கராந்தி தொடங்கி மார்ச் மாதம் 4-ம் நாள் மகாசிவராத்திரி வரை, 55 நாட்கள் கும்பமேளா நடைபெறும். நாட்டின் மிகப்பெரிய 4ஜி சேவை வழங்குநராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பக்கதர்கள் வசதிக்கு என ஜியோபோனில் கும்ப என்ற சிறப்பு பிரிவை தொடங்கியுள்ளது.

பக்தர்களுக்கு கும்பமேளா ஜியோபோன் சேவை அறிமுகம்

Kumbh ஜியோபோன் சிறப்புகள்

கும்பமேளா சிறப்பு தகவல்கள்

ரியல்-டைம் போக்குவரத்து சேவைகள் (பேருந்து , சிறப்பு ரெயில்கள்)

அருகாமையில் உள்ள முக்கிய போக்குவரத்து இடங்கள்

அவசரகால உதவி போன் நெம்பர்

வழிதடங்கள் மற்றும் வரைபடம்

கும்பமேளா குளியல் நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

ரெயில்வே சிறப்பு தகவல்கள்

குடும்ப உறுப்பினர்களை இணைக்க

குடும்ப உறுப்பினர்கள் நிகழ்நேர இருப்பிடம்

தொலைந்த குடும்ப உறுப்பினர்களை மிக எளிமையாக கண்டுபிடிக்க இயலும்.

பக்தர்களுக்கு கும்பமேளா ஜியோபோன் சேவை அறிமுகம்

பக்தி தொகுப்புகள்

கும்ப ஜியோபோனில் 24×7 பக்தி பாடல்கள்

கும்பமேளா சிறப்பு நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு

இதைத் தவிர ஜியோபோன் இலவச வாய்ஸ் கால், டேட்டா மற்றும் ஜியோ செயலிகள் முற்றிலும் இலவசமாக பயன்படுத்தலாம்.

கும்ப ஜியோபோன் சேவையை பெற ஜியோபோனில் உள்ள ஜியோ ஸ்டோர் மூலம் பெறலாம் .

மேலும் ஜியோ இலவச டோல்ஃபீரி எண் 1991 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெறலாம்.

இந்த சேவை புதிய மற்றும் முந்தைய ஜியோபோன் வாடிக்கையாளர் அனைவருக்கும் கிடைக்கும்.