தொலைந்த மற்றும் திருடப்படுகின்ற மொபைல்களை சிம் கார்டினை நீக்கினாலும் நிரந்தரமாக பயன்படுத்தவதற்கு தடை செய்யும் நுட்பத்தினை தொலைத் தொடர்பு துறை அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.

இனி., திருட்டு மொபைலை நிரந்தரமாக பயன்படுத்த முடியாது..!

திருட்டு மொபைல்

நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற ஸ்மார்ட்போன் விற்பனையை போலவே திருடப்படுவதும், தவறுதலாக தொலைப்பது அதிகரித்தே வருகின்ற சமயங்களில் போனை நிரந்தரமாக மீட்கப்படுவது என்பது மிகுந்த சிரமமாக உள்ள சூழ்நிலையில், தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல்களை சிம் கார்டினை நீக்கினாலும் நிரந்தரமாக செயலிழக்கச் செய்யும் வகையிலான திட்டத்தை தொலைத் தொடர்பு துறை சோதனை ஓட்ட முறையில் செயல்படுத்தி வருகின்றது.

இனி., திருட்டு மொபைலை நிரந்தரமாக பயன்படுத்த முடியாது..!

நாட்டின் பொது தொலைத் தொடர்பு துறை நிறுவனம் பி.எஸ்.என்.எல் மற்றும் மத்திய தொலைத் தொடர்பு துறையும் இணைந்து மத்திய உபகரண அடையாள பதிவு (CEIR- Central Equipment Identity Register) எனும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இந்த முறை தற்போது கடந்த 6 மாதங்களாக சோதனை ஓட்ட முறையில் மும்பையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல்களின் ஐஎம்இஐ (IMEI) எண் எனப்படும் 15 இலக்க சர்வதேச மொபைல் உபகரண அடையாள எண் மூலம் அந்த மொபைலை சிம் கார்டினை நீக்கியிருந்தாலும், எந்த தொலை தொடர்பு வட்டாரங்களிலும் செயல்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இனி., திருட்டு மொபைலை நிரந்தரமாக பயன்படுத்த முடியாது..!

இதனால் திருடப்பட்ட மொபைல் வேறு ஒருவர் பயன்படுத்துவது போலியான IMEI எண்கள் உருவாக்குவது போன்றவற்றை தடுக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தவறுதாக ஐஎம்இஐ நம்பரை பயன்படுத்தினால் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத்தை தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் கொண்டு வரவுள்ளது.