மே மாத முடிவில் நாட்டின் மொத்த தொலைத்தொர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 120 கோடியை கடந்திருக்கின்ற நிலையில் ஜியோ மே மாதம் 47.86 லட்சம் பயனாளர்களை இணைத்துள்ளது.

மே மாதம் தொலைத் தொடர்பு துறை

இந்தியாவின் மொத்த தொலைத்தொடர்பு பயனாளர்கள் எண்ணிக்கை 120.49 கோடியை கடந்துள்ளது. இதில் மொபைல் மற்றும்  வயர்வழி தொலைபேசி சேவையும் அடங்கும்.

கடந்த ஏப்ரல் மாத முடிவில் 1.19 பில்லியன் வாடிக்கையாளராக இருந்த தொலை தொடர்பு துறையில் மே மாதந்திர முடிவில் 1.20 பில்லியனாக உயர்வுபெற்றுள்ளது.

மெட்ரோ மற்றும் நகரபுறங்களில் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடுகையில் 0.15 சதவிகித வளர்ச்சி பெற்று 69.70 கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாத முடிவில் நகர்புற சந்தாதாரர் எண்ணிக்கை 69.59 கோடியாக இருந்தது.

கிராமபுறங்களில் தொலை தொடர்பு சேவையை பெறுவோர் வளர்ச்சியாக 1.00 சதவீத வளர்ச்சி பெற்ற உயர்ந்துள்ளது. மேலும் வயர்வழி தொலைபேசி சேவை பெறுவோரின் எண்ணிக்கை 24.4 மில்லியனாக உள்ளது.

வயர்லெஸ் வாடிக்கையாளர் இணைப்பில் ஜியோ முதலிடம்

ஜியோ நிறுவனம் கடந்த மே மாதம் 47.86 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இதே காலகட்டத்தில் 20.09 லட்சம் வாடிக்கையாளர்களை ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் 13.59 லட்சம் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.

மற்ற நிறுவனங்களின் விபரத்தை படத்தில் காணலாம்..

எம்என்பி

எண்ணை மாற்றாமல் தொலை தொடர்பு சேவை வழங்குநரை மாற்றும் எம்என்பி சேவை கோரியவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதம் 53 லட்சமாக உள்ளது. அதிகபட்சமாக எம்என்பி கோரியவர்களின் எண்ணிக்கை கர்நாடக மாநிலத்தில் அதிகமாக உள்ளது.