பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது பாரத் ஃபைபர் FTTH பிராட்பேண்ட் பயனாளர்களுக்கு அதிரடியாக தினசரி 40 ஜிபி டேட்டாவை அதிகபட்சமாக 100 Mbps வேகத்தில் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தனியார் டெலிகோ நிறுவனங்களுக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகள் வாயிலாக போட்டியை ஏற்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம், பிராட்பேண்ட் சேவையில் அதிகப்படியான டேட்டா நன்மை வழங்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் வரவுள்ள ஜியோ ஜிகா ஃபைபர் உட்பட ஏக்ட் ஃபைபர்நெட், ஏர்டெல், மற்றும் ஹேத்வே உள்ளிட்ட நிறுவனங்களை எதிர்கொள்ள சமீபத்தில் பாரத் ஃபைபர் என்ற அதிவிரைவான FTTH சேவையை தொடங்கியுள்ளது.
இந்நிறுவனம் ஃபைபர் டூ தி ஹோம் முறையில், தற்போது ரூ .777, ரூ.1,277, ரூ.3,999, ரூ .5,999, ரூ 9,999 மற்றும் ரூ 16,999 பிளான்களுடன் புதிதாக ரூ.2,499 விலையுள்ள பிளானை வெளியிட்டுள்ளது. இந்த பிளானில் தினசரி அதிகபட்ச 40 ஜிபி தரவை வழங்க உள்ளது. இந்த பிளானில் அறிமுக சலுகையாக ஆஃபர்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி 28ந் தேதிக்கு முன்னதாக ரூ.2,499 கட்டணத்திலான பிளானில் 6 மாதம் அல்லது 12 மாத பிளான்களை தேர்வு செய்தால் அதிகபட்சமாக 25 சதவீத சலுகையை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
ரூ.2,499 கட்டணத்தில் மாதந்திர பிளானாக வழங்கப்பட்டுள்ள பாரத் ஃபைபர் FTTH முறையில் அதிகபட்சமாக 100 Mbps வேகத்தில் தினமும் 40 ஜிபி டேட்டா பெறுவதுடன், தினசரி பயன்பாட்டை கடந்த பிறகு இணைய வேகம் 2 Mbps முறையில் வரம்பற்ற இணையத்தை பெறலாம்.
சிறப்பு ஆஃபர்
ரூ.2,499 கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 6 மாதம் அல்லது 12 மாதம் பிளான்களை தேர்ந்தடுப்பதன் வாயிலாக 25 சதவீதம் கேஸ்பேக் நன்மையை பெறலாம். 6 மாத திட்டத்தை தேர்ந்தெடுத்தால் ரூ.3,499 மற்றும் 12 மாத திட்டத்தை தேர்வு செய்தால் ரூ.7,400 கேஷ்பேக் பெறலாம் என குறிப்பிட்டுள்ளது.