ஜியோ

கட்டண உயர்விற்கு பிறகு முந்தைய ரீசார்ஜ் பிளான்களை விட 40 சதவீதம் விலை உயர்த்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மீண்டும் ரூ.149 ப்ரீபெய்டு பிளானை கொண்டு வந்துள்ளது. ஆனால் டேட்டா நன்மையை குறைத்துள்ளது.

பொதுவாக பெரும்பாலான ஜியோ பயனாளர்களின் விருப்ப தேர்வாக அமைந்திருந்த ரூ.149 பிளான் மீண்டும் கொண்டு வரப்பட்டாலும், நன்மைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. முன்பே இந்த பிளானின் வேலிட்டி 28 நாட்களிலிருந்து 24 நாட்களாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் கட்டண உயர்விற்கு பிறகு நீக்கப்பட்டு தற்போது இணைக்கப்பட்டுள்ள இந்த பிளானில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க் அழைப்பு 300 நிமிடம் மட்டும், தினமும் 100 எஸ்எம்எஸ், மற்றும் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, 24 நாட்கள் வேலிடிட்டி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. முன்பாக, இந்த பிளானில் 1.5 ஜிபி டேட்டா நன்மை வழங்கப்பட்டது. மற்ற நெட்வொரக் FUP கடந்த பிறகு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும்.

டேட்டா குறைப்பு.., ஜியோ ரூ.149 பிளான் மீண்டும் அறிமுகம்

மேலும், ரூ.98 ரீசார்ஜ் பிளானும் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பிளானில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு மொத்தமாக 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு கூடுதலாக ரூ.10 முதல் IUC டாப் அப் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு தொடர்ந்து இலவச வாய்ஸ் காலிங் வசதியை வழங்குகின்றன.