வட்ட வடிவில் ரிலையன்ஸ் ஜியோஃபை ஹாட்ஸ்பாட் விற்பனைக்கு வெளிவந்துள்ளதுஇந்தியாவின் முன்னணி 4ஜி தொலைத் தொடர்பு சேவை வழங்குநராக விளங்கும் முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் , 2ஜி/3ஜி மொபைல் போன் , கணினி, ஸ்மார்ட் டிவி ஆகியவற்றை இணைக்கும் வகையில் வட்ட வடிவிலான ரிலையன்ஸ் ஜியோஃபை ஹாட்ஸ்பாட் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோஃபை ஹாட்ஸ்பாட்

வட்ட வடிவில் ரிலையன்ஸ் ஜியோஃபை ஹாட்ஸ்பாட் விற்பனைக்கு வெளிவந்துள்ளது

ரூ.1999 விலையில் ஜியோ ஃபுட்பால் ஆஃபரை பெற்ற ஹாட்ஸ்பாட் விற்பனைக்கு கிடைத்து வரும் நிலையில், ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் பிரத்தியேகமாக வட்ட வடிவத்தை பெற்ற ஜியோ ஃபை டாங்கில் 3000mAh திறன் பெற்ற பேட்டரி கொண்ட மாடலாக ரூ.999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

4ஜி எல்டிஇ ஆதரவை பெற்று விளங்கும் இந்த கருவியில் ஒரு யூஎஸ்பி போர்ட் பெற்று அதிகபட்சமாக 31 கருவிகளை இணைக்கும் திறன் கொண்டதாக விளங்குகின்ற வகையில் அதிகபட்சமாக பேட்டரி திறன் 8 மணி நேரம் தாக்குபிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் 3000mAh திறனை பெற்று விளங்குகின்றது.

ஃபிளிப்கார்ட்  வாயிலாக பிரத்தியேகமாக விற்பனைக்கு கிடைக்கின்ற  JioFi JMR815 மாடல் ஆஃபர் விபரங்களை ஜியோ 4ஜி நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

மேலும் படிங்க – ஜியோ ஃபை டாங்கி ல் பற்றி அறிவோம்