ஏர்டெல்

டிராய் ஐயூசி எனப்படுகின்ற இணைப்பை ஏற்படுத்தும் கட்டணத்தை டிசம்பர் 2020 வரை செயல்படுத்த உள்ளது. ஜனவரி 1, 2021 க்கு பிறகே ஐயூசி கட்டணம் முழுமையாக நீக்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே, ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து நிமிடத்திற்கு 6 பைசா கட்டணத்தை வசூலிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ஐயூசி கட்டணத்தை நீக்குவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஜியோ ஐயூசி கட்டணத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தது.

டிராய் அறிக்கையில், ஐ.யூ.சி என்பது ஒரு தொலைதொடர்பு சேவை வழங்குநரால் ஒரு நெட்வொர்கில் இருந்து மற்றொரு ஆபரேட்டர் நெட்வொர்க்கிற்கு அழைக்கும் போது கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தை 2020 டிசம்பர் 31 வரை நிமிடத்திற்கு 6 பைசாவாக இருக்கும் என்று தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது வயர்லெஸ் முதல் வயர்லெஸ் உள்நாட்டு அழைப்புகளுக்கு 2021 ஜனவரி 1 முதல் பூஜ்ஜிய கட்டணம் ” முறையை செயல்படுத்த உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, ரிலையன்ஸ் ஜியோவாடிக்கையாளர்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க உள்ளது. மற்ற நெட்வொர்க்குகள் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா இலவசமாக அழைப்புகளை வழங்குகின்றது.