நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன் அறிமுகம் - MWC 2018முதல் தலைமுறை மொபைல் போன் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பிய வளைந்த நோக்கியா 8110 ஸ்லைடர் மேட்ரிக்ஸ் போன், தற்போது 4ஜி ஆதரவுடன் கூடிய நோக்கியா 8110 4G ஸ்லைடர் மொபைலாக பார்சிலோனாவில் நடைபெறுகின்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் (Mobile World Congress 2018) அரங்கில் நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 1, நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 6 (2018) போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன்

நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன் அறிமுகம் - MWC 2018

ஃபீச்சர் ரக 4ஜி மொபைல் போன் வரவு சந்தையில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மீண்டும் நீண்ட பாரம்பரியத்தை பெற்ற நோக்கியா மொபைல் போன்களில் ஒன்றான தி மேட்ரிக்ஸ் படத்தில் நியோ பயன்படுத்தும் ஸ்லைடர் ரக மொபைலுக்கு புதிய ஆக்கத்தை கொடுத்த ஹெச்எம்டி குளோபல் சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

4ஜி ஆதரவை பெற்றதாக வரவுள்ள நோக்கியா 8110 மொபைல் போனில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகப்படுத்திய ஜியோபோன்  இயக்கப்படுகின்ற கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்படும் வகையில் 4ஜி வோல்ட்இ ஆதரவை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ளது.

`4G LTE ஆதரவை பெற்று கருப்பு மற்றும் மஞ்சள் ஆகிய இரு நிறங்களில் பாலிகார்பனேட் பாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனில் பிரசத்தி பெற்ற சிப்செட் நிறுவனமாக விளங்கும் குவால்காமின் 205 ஸ்னாப்டிராகன் சிப்செட் பெற்று 512 MB RAM கொண்டு 4ஜிபி சேமிப்பு திறனை பெற்றதாக இரட்டை சிம் கார்டு ஆதரவினை கொண்டுள்ளது.

பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள 2 மெகாபிக்சல் சென்சார் கேமரா எல்இடி ஃபிளாஷ் கொண்டிருப்பதுடன் கூடுதல் விருப்பங்களாக 4ஜி எல்டிஇ, WLAN IEEE 802.11 b/g/n, ப்ளூடுத் 4.1, GPS/AGPS ஆகியவற்றை பெற்றுள்ளது.

இந்த மொபைலில் கூகுள் தேடுபொறி உட்பட கூகுள் அசிஸ்டென்ஸ், மேப், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றுடன் எதிர்காலத்தில் வாட்ஸ்அப் செயலியும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

1500 mAh திறன் கொண்டு இயக்கப்படுகின்ற நோக்கியா 8110 4ஜி மொபைல் போன் இந்தியா உட்பட பல்வேறு வளரும் சந்தைகளில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ள நிலையில் ஐரோப்பாவில் நோக்கியா 8110 4ஜி  விலை €79 ( Rs 6,300) என நிர்னையம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன் அறிமுகம் - MWC 2018

இதைத்தவிர நோக்கியா பிராண்டில் நோக்கியா 1, நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 6 (2018) , நோக்கியா 7 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here