நமது நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன.

சுதந்திர தின டெலிகாம் சலுகைகள்

இன்று நாட்டின் 71வது சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தொலைத்தொடர்புத் துறை நிறுவனங்களில் வழங்கப்படுகின்ற சிறப்பு சலுகைகளை தொடர்ந்து இங்கே அறிவோம்.

ஆர்காம்

2ஜி பயனாளர்களுக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அதிரடி சலுகையாக ரூ.70 கட்டணத்தில் Data Ki Azadi என்ற பெயரில் வரம்பற்ற 2ஜி டேட்டாவை 365 நாட்களுக்கு வழங்குவதுடன் ரூ. 56 டாக்டைம் வழங்குகின்றது.

இந்த சலுகை ஆகஸ்ட் 14 முதல் 16 வரை கிடைக்கப் பெற உள்ளது. இந்த சலுகையில் 2ஜி சேவை ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி தரவு வருடம் முழுவதும் வழங்கப்படும். எல்டிஇ சிம் பெற்றுள்ள பயனர்களுக்கு மாதம் 1ஜிபி 2ஜி தரவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்

நாட்டின் பொது தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் சிறப்பு சுதந்திர தின சலுகையாக அனைத்து வட்டங்களிலும் ரோமிங் சேவையை நீக்குவதுடன் , நீங்கள் எந்த பிளானில் அழைப்புகள், டேட்டா பெற்று வருகின்றீர்களோ அதற்கு ஏற்ப அனைத்தையும் நாடு முழுவதும் எங்கேயும் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு சிறப்பு எஸ்.டி.வி பிளான்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின் வருமாறு.

மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள்

தங்களது அதிகார்வப்பூர்வ ஆப் வாயிலாக சிறப்பு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. உங்களது நெட்வொர்க் ஆப் வாயிலாக பிளான்களை அறிந்து கொள்ளலாம்.