நாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்

பிரசத்தி பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையின் கீழ் செயல்படும், பதஞ்சலி நிறுவனம் தொலை தொடர்பு துறையில் கால்பதித்துள்ள நிலையில் வாட்சப்பிற்கு எதிராக சுதேசி மெசேஞ் ஆப் என்ற நோக்கத்தில் கிம்போ ஆப் (Kimbho Chat app) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

கிம்போ சாட் ஆப்

நாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்

பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி நிறுவனம் உணவு பொருட்கள் மற்றும் அன்றாட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், சமீபத்தில் பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பதஞ்சலி சிம் கார்டினை வெளியிட்டுள்ளது.

நாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்

இந்நிலையில் உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கும் வாட்சப செயலிக்கு சவால் விடுக்கும் வகையில் சுதேசி மெசஞ்சிங் செயலில் என்ற நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கிம்போ ஆப் அறிமுகம் செய்த ஒரு மணி நேரத்தில் 5 ஆயரத்துக்கு அதிகமான பயனர்களை பெற்ற இந்த செயில சர்வர் செயலிழந்த நிலையில் விரைவில் புதுப்பிக்கப்படும் என பதஞ்சலி தனது ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அறிமுகம் செய்த சில மணி நேரங்களில் கிம்போ செயிலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பதஞ்சிலி வெளியிட்டுள்ள ட்வீட்டர் குறிப்பில், கிம்போ செயலி அதிகப்படியான பயனாளர்களை சில மணி நேரங்களில் பெற்றதால், நாங்கள் கடுமையான சர்வர் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளதால், தளத்தின் சர்வர்களை மேம்படுத்திய பிறகு விரைவில் , அதாவது ஜூன் 21ந் தேதி சர்வதேச யோகா தினத்தில் அதிகார்வப்பூர்வமாக பயன்பாட்டுக்கு கிடைக்கப் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்

” கிம்போ என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. அந்த மொழியில் நலமாக இருக்கிறீர்களா என்பதே கிம்போ என்பதன் பொருளாகும்.