Home Tech News Telecom ஜியோ பிளாட்ஃபாரத்தில் ரூ.730 கோடியை முதலீடு செய்த குவால்காம்

ஜியோ பிளாட்ஃபாரத்தில் ரூ.730 கோடியை முதலீடு செய்த குவால்காம்

குவால்காம் இன்கார்பிரேட்டேட் நிறுவனத்தின் அங்கமான குவால்காம் வென்ச்சர்ஸ் ரூ.730 கோடியின் மூலம் ஜியோ பிளாட்ஃபாரத்தின் 0.15 % பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக்கை தொடர்ந்து தற்போது வரை 13 நிறுவனங்கள் மூலம் ரூ.1,18,318.45 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் குவால்காம் வயர்லெஸ் நுட்பத்தில் முன்னோடியாக பல்வேறு நுட்பங்களை உருவாக்கி வருகின்றது. 5ஜி, செயற்கை அறிவுத்திறன், ஐஓடி, நெட்வொர்க்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதன்மையாக விளங்குகின்றது.

தற்போது முதலீடு செய்திருக்கும் குவால்காம் நிறுவனத்தின் 730 கோடி ரூபாயையும் சேர்த்து, ஜியோ பிளாட்ஃபாரத்தில் முன்பாக முதலீடு செய்த பேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ் (இருமுறை), விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர், முபடாலா, ஏ.டி.ஐ.ஏ, டி.பி.ஜி, எல் கேட்டர்டன், பி.ஐ.எஃப், இன்டெல் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப முதலீட்டாளர்களிடமிருந்து மொத்தமாக ரூ.1,18,318.45 கோடி நிதியை ரிலையன்ஸ் திரட்டியுள்ளது.

புதிய முதலீட்டை தொடர்ந்து ஜியோ பிளாட்ஃபாத்தின் மதிப்பு ரூ.4.91 லட்சம் கோடி மற்றும் நிறுவன மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடி என மதிப்பிடுகிறது.

Exit mobile version