ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் (ஆர்காம்) நிறுவனம் வருடம் முழுமைக்கும் தினமும் 1ஜிபி டேட்டாவை ரூ.365 கட்டணத்தில் வழங்குகின்றது. ஆனால் 2ஜி டேட்டா மட்டுமே வழங்குகின்றது.

தினமும் 1ஜிபி டேட்டா ரூ.1 மட்டுமே..! : ஆர்காம்

ஆர்காம் 365

பிஎஸ்என்எல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களின் அதிரடி சலுகையை போல 2ஜி சேவையை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ஆர்காம் வருடத்திற்கு 365ஜிபி டேட்டாவை வழங்குகின்றது.

அதாவது தினசரி பயன்பாட்டிற்கு 1ஜிபி டேட்டா வழங்குகின்றது. சென்னை தொலைத்தொடர்பு வட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ. 365 கட்டணத்தில் 382ஜிபி டேட்டாவை வருடத்திற்கு வழங்குகின்றது. வட்டங்களை பொறுத்து விலை மாறுபட்டாலும் தினசரி பயன்பாட்டிற்கு 2ஜி இணைய சேவையில் 1ஜிபி டேட்டா வழங்குவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தினமும் 1ஜிபி டேட்டா ரூ.1 மட்டுமே..! : ஆர்காம்

சமீபத்தில் 4ஜி சேவையை பயன்படுத்தும் ஆர்காம் வாடிக்கையாளர்களுக்கு  ரூ.193 கட்டணத்தில் தினசரி 1ஜிபி டேட்டா என 28 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வழங்கியது. மேலும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு சிறப்பு டேட்டா சலுகைகளை வழங்கிய நிலையில் 2ஜி சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான பிளானை ஆர்காம் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் பொது தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ. 666 கட்டணத்தில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற கால்களை வழங்கியது இங்கே குறிப்பிடதக்கதாகும்.