365 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் இலவச வை-பாட் வழங்கும் ஆர்காம்.!

கடுமையான நெருக்கடி மிகுந்த துறைகளில் ஒன்றாகி விட்ட தொலைத்தொடர்பு துறையில் தனது பங்காளிக்கு எதிராக ஆர்காம் ரூ.5,199 விலையில் 365 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் இலவச வை-பாட் டாங்கில் ஒன்றை வழங்குகின்றது.

ஆர்காம் டேட்டா சலுகை

ஜியோ அறிவித்துள்ள பல்வேறு பிளான்களை போன்ற போட்டியாளர்கள் தங்களது திட்டங்களை மாற்றியமைத்து வரும் நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வை-பாட் மற்றும் ரிலையன்ஸ் 4ஜி சிம் கார்டுடன் இணைந்து பண்டில் சலுகையை வழங்குகின்றது.

இசட்டிஇ நிறுவனத்தின் WD670 எனும் வை-ஃபை டாங்கில் குவால்காம் MDM9307 சிப்செட் கொண்டு இயக்குப்படுகின்ற இந்த மாடலில் உயர்தர 4ஜி இணையம் மற்றும் 2ஜி/3ஜி போன்ற மொபைல்களில் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை வழங்குகின்றது.

எல்டிஇ ஆதரவினை பெற்ற பேன்ட் 3, பேன்ட் 5 மற்றும் பேன்ட் 40 அலைவரிசைகளில் இயங்கும் டாங்கில் கருவியில் யூஎஸ்பி போர்ட், சிம் கார்டு ஸ்லாட் மற்றும் 32ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் ஆகியவற்றுடன் 2300mAh திறன் பெற்ற பேட்டரி கொண்டு ஒரு முறை சார்ஜில் 7 மணி நேரம் வரை தாக்குபிடிக்கும் திறன் பெற்றுள்ளது.

 

அதிகபட்சமாக 10க்கு மேற்பட்ட கருவிகளை இணைக்கும் திறன் கொண்ட வை-பாட் கருவியின் விலை ரூ. 3200 என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பன்டில் சலுகையுடன் வழங்கும் போது டாங்கில் கருவி இலவசமாகவும், தினமும் 1ஜிபி டேட்டா என வருடம் முழுவதும் அதாவது 365 நாட்களுக்கு வழங்குகின்றது.

தற்போது இந்த கருவி ரூ.5,199 விலையில் https://offers.rcom-eshop.com எனும் இணையபக்கத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது. மேலும் இஎம்ஐ ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You