ஏர்செல், ஆர்காம் இணைப்பு திட்டம் தோல்வி அடைந்ததுமுகேசு அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் ஆர்காம் – ஏர்செல் இணைப்பை செயற்படுத்த தொடங்கியிருந்த திட்டத்தை கைவிடுதவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்காம் – ஏர்செல்

ஏர்செல், ஆர்காம் இணைப்பு திட்டம் தோல்வி அடைந்தது

கடந்த ஆண்டு இந்திய தொலைத்தொடர்புத் துறையில் கால் பதித்த முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி சலுகைகளின் காரணமாக ஏர்டெல் நிறுவனம் டெலினார் நிறுவனத்தையும், வோடபோன்-ஐடியா இணைப்பு மற்றும் ஏர்செல்- ரிலையன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் இணைப்பு ஆகிய திட்டங்களை நிறுவனங்கள் தேற்கொண்டிருந்த நிலையில் ஆர்காம் – ஏர்செல் இணைப்பை தவிர மற்ற நிறவனங்களின் இணைப்பு ஏறக்குறைய செயற்பாட்டுக்கு வரத்தொடங்கியுள்ளது.

ஆர்­காம் என, அழைக்­கப்­படுகின்ற, ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறுவனம், அனில் அம்பானிதலை 46 ஆயி­ரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி உள்­ளது. இதை, ஏர்­செல் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­து­வ­தன் மூலம், 20 ஆயி­ரம் கோடி ரூபா­யாக குறைக்கவும், ஜியோ-வின் பாதிப்பு மற்றும் கடன் அளவை குறைக்க ஆர்­காம் திட்­ட­மிட்டிருந்தது.

ஏர்செல், ஆர்காம் இணைப்பு திட்டம் தோல்வி அடைந்தது

இந்நிலையில், ஆர்காம் மற்றும் ஏர்செல் நிறுவனங்களின் இணைப்பிற்கு, ஆர்காம் டெலிகாம் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கடனை அடைக்க வேறு வழியைக் கையாள முடிவு செய்துள்ளது.

எனவே,இரு நிறுவனங்களும் பல்வேறு  சட்­டம் மற்றும் ஒழுங்­கு­முறை அமைப்­பு­கள், அனு­மதி வழங்­கா­மல் இழுத்­த­டிப்­ப­தா­லும், பல தரப்­பி­னர், உள்­நோக்­கத்­து­டன் தலை­யிட்டு உள்­ள­தா­லும், நிறுவனங்களின் பரஸ்­பர ஒப்புதலுடன், இணைப்பு திட்­டத்தை கைவிட்டு உள்­ள­தாக, ஆர்­காம் தெரிவித்துள்­ளது.

ஏர்செல், ஆர்காம் இணைப்பு திட்டம் தோல்வி அடைந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here