தினமும் 1ஜிபி டேட்டா ரூ.147 மட்டுமே : ஆர்காம் ஆஃபர்அனில் அம்பானி கீழ் செயல்படுகின்ற ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் ஆர்காம் தனது 3ஜி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 147 மற்றும் ரூ.193 கட்டணத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்குகின்றது.

ஆர்காம் ஆஃபர் 193

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் என்றால் ரிலையன்ஸ் சகோதரர்கள் என்பதனை யாரும் மறுப்பதற்க்கில்லை, முன்பு அனில் அம்பானி தற்போது முகேஷ் அம்பானி என தொடர்ந்து பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றது.

ஆர்காம் ரூ.147 பிளான்

ரூ.147 திட்டம் பல்வேறு வட்டங்களில் வழங்கப்படுகின்ற நிலையில் 3ஜி சிம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

ஆர்காம் ரூ.193 பிளான்

ரூ.193 கட்டணத்தில் வந்துள்ள திட்டத்தில் அனைத்து வட்டங்களிலும்  வழங்கப்படுகின்ற நிலையில் 3ஜி சிம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகின்றது. மேலும் கூடுதலாக நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் இலவச அழைப்புகளை அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்குகின்றது.

தினமும் 1ஜிபி டேட்டா ரூ.147 மட்டுமே : ஆர்காம் ஆஃபர்

சமீபத்தில் இந்நிறுவனம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரூ.101 கட்டணத்தில் ரூ.50 டாக்டைம், 1ஜிபி டேட்டா 3ஜி/4ஜி மற்றும் அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் நிமிடத்திற்கு 30 பைசா என அறிவித்திருந்தது.

தினமும் 1ஜிபி டேட்டா ரூ.147 மட்டுமே : ஆர்காம் ஆஃபர் தினமும் 1ஜிபி டேட்டா ரூ.147 மட்டுமே : ஆர்காம் ஆஃபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here