ஜியோ 5ஜி, ஜியோ டிவி+, ஜியோ கிளாஸ் - ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43வது வருட கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தின் ஜியோ 5ஜி, ஜியோ டிவி+ ஜியோ கிளாஸ் உட்பட கூகுள் முதலீடு என பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு ஜியோ பிளாட்ஃபாரத்தின் வளர்ச்சியை குறிப்பிட்டுள்ளார்.

ஜியோ 5ஜி

ஜியோ 5ஜி, ஜியோ டிவி+, ஜியோ கிளாஸ் - ரிலையன்ஸ் ஜியோ

வருடாந்திர கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி அடுத்த தலைமுறை சேவையான 5ஜி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார், ஜியோ நிறுவனம் 5ஜி சேவையில் முழுமையாக உருவாக்கியுள்ளதாக அம்பானி அறிவித்துள்ளார். இது இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த 5ஜி சேவைகளை தொடங்க நிறுவனத்திற்கு பெரிதும் உதவும். 100 சதவீத உள்நாட்டில் உருவாக்கப்பட்டு தொழில்நுட்பங்களை மட்டும் பயன்படுத்தப் போவதாக குறிப்பிட்டுள்ளார். கூடுதலாக, 5ஜி ஸ்பெக்ட்ரம் கிடைத்தவுடன் ஜியோ 5ஜி சோதனை ஓட்டத்துக்கு தயாராக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு முதல் துவங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் மற்ற ஆபரேட்டர்களுக்கு 5ஜி நுட்பத்தை வழங்கும் நிலையில் ஜியோவும் உள்ளது. ஜியோ தனது 4ஜி நெட்வொர்க்கை நேரடியாக 5ஜி சேவைக்கு எளிதாக மேம்படுத்த முடியும். இவை ஜியோவின் ஒருங்கிணைந்த, ஐபி நெட்வொர்க் மூலமாக சாத்தியப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜியோ 5ஜி, ஜியோ டிவி+, ஜியோ கிளாஸ் - ரிலையன்ஸ் ஜியோ

ஜியோ டிவி பிளஸ்

அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற 12 விதமான ஓடிடி (OTT) சேவையை ஒன்றாக இணைத்து ஜியோ டிவி+ என்ற பெயரில் துவங்க உள்ளனர். இதற்கான செயல் விளக்கம் மேற்கொள்ளப்பட்டது.

ஜியோ கிளாஸ்

ஜியோ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள 75 கிராம் மட்டுமே எடைக் கொண்ட கிளாஸ் மூலமாக ரியாலிட்டி வீடியோ சந்திப்புகளை மேற்கொள்ள வழிவகுப்பதுடன், ஸ்மார்ட்போன் மூலம் சிறிய வயர் வாயிலாக இணைக்கப்பட்டு 3D முறையில் பயன்பெறுவதுடன் 25க்கு மேற்பட்ட செயலிகளை இந்த ஜியோ கிளாஸ் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஜியோ 5ஜி, ஜியோ டிவி+, ஜியோ கிளாஸ் - ரிலையன்ஸ் ஜியோ

குறைந்த விலை 4ஜி/5ஜி ஸ்மார்ட்போன்

கூகுள் மற்றும் ஜியோ இணைந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி மிக குறைவான விலையில் 4ஜி மற்றும் 5ஜி ஆதரவினை வழங்கும் வகையிலான ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்தான மற்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. தற்போது கூகுள் நிறுவனம் ஜியோவில் ரூ.33,737 கோடி முதலீட்டை மேற்கொண்டுள்ளது.

ஜியோ 5ஜி, ஜியோ டிவி+, ஜியோ கிளாஸ் - ரிலையன்ஸ் ஜியோ