சமீபத்தில் நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 41வது ஆண்டு வருடாந்திர பொது கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் (Jio GigaFiber) பிராட்பேண்ட், ஜியோ ஜிகா டிவி, ஜியோபோன் 2, ஜிகா ஸ்மார்ட்ஹோம் சிஸ்டங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய தொலை தொடர்பு சந்தையில் 4ஜி சேவை வாயிலாக களமிறங்கி ஜியோ நிறுவனம், சுமார் 22 மாதங்களில் 21.5 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை பெற்ற மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15ந் தேதி ஜியோபோன் 2 மொபைலை வெளியிட உள்ள நிலையில், முதற்கட்டமாக 1100 நகரங்களில் ஜியோ ஜிகா பைபர் கம்பி வழி பிராட்பேண்ட் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

பிராட்பேண்ட் சேவையில் இந்தியா சர்வேச அளவில் பின்தங்கியிருக்கிறது. இச்சேவையில் சர்வதேச அளவில் இந்தியாவை முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வருவதற்கான நோக்கத்தை ரிலையன்ஸ் செயற்படுத்த தொடங்கியுள்ளதாக அம்பானி குறிப்பிட்டுள்ளார்,

1 Gbps வேகத்தில் இணையத்தை வழங்கும் நோக்கில் 1100 நகரங்களுக்கு முதற்கட்டமாக தொடங்கப்பட உள்ள இந்த சேவையை பெறுவதற்கு மைஜியோ ஆப் மற்றும் ஜியோ.காம் வலைதளம் மூலம் பதிவு செய்ய ஆகஸ்ட் 15, 2018 முதல் கிடைக்கபெற உள்ள நிலையில், நவீன தொலைக்காட்சி பெட்டிகளை பிராட்பேண்ட் முறையில் ஜிகா ஃபைபர் செட்டாப் பாக்ஸ் வாயிலாக இணைக்கப்பட்டு அதிவேக இணைய சேவை வாயிலாக டிவியை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜிகாபைபர் இணைக்கப்பட்ட தொலைக்காட்சி மூலமாக வீடியோகால் செய்ய முடியும், மேலும் மொபைல்போன்களுக்கும் வீடியோ கால் அழைப்பை ஏற்படுத்த இயலும்.  இந்த செட் டாப் பாக்ஸ்  வாயிலாக,4K தொழில்நுட்பத்தில் வழங்கப்படும் என்பதனால் தியேட்டர் அனுபவத்தைப் பெற முடியும். பல மொழிகளில் வாய்ஸ் கமென்ட் கொடுக்கும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.