ஒரு வருடம் இலவச சேனல்கள், செட் டாப் பாக்ஸ் - ரிலையன்ஸ் பிக் டிவிஅனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய ரிலையன்ஸ் பிக் டிவி டிடிஎச் சேவையை நாடு முழுவதும் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாக ஒரு வருட இலவச சந்தாவுடன் வழங்குகின்றது.

ரிலையன்ஸ் பிக் டிவி டிடிஎச்

ஒரு வருடம் இலவச சேனல்கள், செட் டாப் பாக்ஸ் - ரிலையன்ஸ் பிக் டிவி

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அங்கமாக வழங்கப்பட உள்ள ரிலையன்ஸ் பிக் டிவி டிடிஎச் சேவையில் இலவச செட் டாப் பாக்ஸ், ஒரு வருட இலவச ஹெச்டி சேனல்கள் , மற்றும் 5 வருடங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற இலவச ஒளிபரப்பில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட சேனல்கள் ஆகியவற்றை வழங்குவதுடன் ரூ.1999 கட்டணமாக செலுத்தப்படுகின்ற தொகையை மூன்று வருடங்களுக்கு பிறகு திரும்ப அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 1, 2018 காலை 10 மணி முதல் reliancedigitaltv.com அல்லது 18002009001 என்ற எண்ணுக்கு அழைத்து முன்பதிவு செய்துக் கொள்ளலாம், முன்பதிவு செய்வதற்கு ரூ.499 கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். முன்பதிவு செய்த நாளிலிருந்து 30 முதல் 45 நாட்களுக்குள் டிடிஎச் குடை மற்றும் செட் டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படுவதுடன் மீதமுள்ள தொகை ரூ.1500 மற்றும் பொருத்துதல் கட்டணம் ரூ. 250 செலுத்த வேண்டியதாக இருக்கும்.

ரூ.1999 கட்டணத்தை திரும்ப பெற இரண்டாவது ஆண்டிலிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.300 குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்வது அவசியமாகும்.

ஒரு வருடம் இலவச சேனல்கள், செட் டாப் பாக்ஸ் - ரிலையன்ஸ் பிக் டிவி

முதல் ஒரு வருடத்திற்கு இலவச சேனல்கள் உட்பட பல்வேறு ஹெச்டி சேனல்கள் ஆகியவற்றை பெறுவதுடன், வழங்கப்பட உள்ள உயர் தர செட்டாப் பாக்ஸ் வாயிலாக பதிவு செய்தல் , யூஎஸ்பி போர்ட் , யூடியூப் பயன்பாடு உள்ளிட்ட வசதிகளை பெறலாம்.

இதுகுறித்து ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்

ரிலையன்ஸ் பிக் டிவி சேவை ஒரு புதிய விடியலின் ஆரம்பமாக, இந்தியர்கள் அவர்களது தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பொழுதுபோக்கை நாடிய விதத்தை மிகவும் எளிமையாக மாற்றவுள்ளது. புதன்கிழமை முதல், ரிலையன்ஸ் பிக் டிவியின் சலுகையோடு பொழுதுபோக்கு இலவசமாகக் கிடைக்கவுள்ளது.

ஒவ்வொரு இந்திய வீட்டிலும் உயர் தர பொழுதுபோக்கு கிடைக்கும். நவீன ஹெச்டி செட் டாப் பாக்ஸுடன், மாணவர்கள் கல்வி ரீதியான விஷயங்களை இலவசமாக பார்க்கலாம்” என்று ரிலையன்ஸ் பிக் டிவி பிரிவின் இயக்குநர் விஜேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here