4 ஜி சேவை வழங்குவதில் ஜியோ முதலிடம் வகிக்கின்றது..!

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவை வழங்குவதில் நாட்டின் 98.8 சதவீத பங்களிப்பினை பெற்று முதலாவதாக உள்ளதாக Ookla அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 11.23 Mbps வேகத்தில் இணையத்தை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோ 4ஜி சேவை

இந்தியாவில் 4ஜி சேவையை வழங்குவதில் ஜியோ நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய அளவில் 4ஜி சேவை வழங்குவதில் 98.8 சதவீத பங்களிப்பை ஜியோ கொண்டிருப்பதுடன், அதனை தொடர்ந்த ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், 90 சதவீதமும், வோடபோன் டெலிகாம் நிறுவனம் 84.6 சதவீதமும், 82.8 சதவீத பங்களிப்பை ஐடியா நிறுவனம் 15 முன்னணி நகரங்களில் பெற்றுள்ளது.

4 ஜி சேவை வழங்குவதில் ஜியோ முதலிடம் வகிக்கின்றது..!

மேலும் இந்த ஆய்வறிக்கையில் ஜூலை முதல் டிசம்பர் 2018 வரையிலான காலத்தில் இணைய வேகம் தொடர்பான ஆய்வில் ஜியோ நிறுவனம் மூன்றாவது இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளது.

இணைய வேகம் 4ஜி

Ookla நிறுவனம் மேற்கொண்ட வேகம் தொடர்பான அறிக்கைக்கு சுமார்  250,138,853 டேட்டா சாம்பிள்களுடன் 595,034 கருவிகளின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

முதலிடத்தில் ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதிகபட்சமாக 11.23 Mbps வேகத்தில் இணையத்தை வழங்கி முதலிடத்திலும், அதனை தொடர்ந்து வோடபோன் நிறுவனம், 9.13 Mbps வேகத்திலும், 7.11 Mbps வேகத்தை ஜியோ 4ஜி நெட்வொர்க் வழங்கி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.