ஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு - டிராய்

டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ 85.64 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்களை டிசம்பர் 2018-ல் இணைத்துள்ளது. 23.3 லட்சம் பயனாளர்களை வோடபோன் ஐடியா நிறுவனம் இழந்துள்ளது.

2018-ல் டிசம்பர் மாதம் ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், 15 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லேண்ட்லைன் இணைப்புகளும் அதிகப்படியான சரிவினை சந்தித்துள்ளது.

ஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு - டிராய்

டிராய் – டிசம்பர் 2018 அறிக்கை

இந்தியாவின் ஒட்டுமொத்த தொலை தொடர்பு இணைப்புகள் எண்ணிக்கை 119.7 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நவம்பர் 2018 மாதத்தில் 119.2 கோடியாக இருந்தது.

கடந்த வருடம், டிசம்பர் 2018-ல் இந்திய ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்த தொலைதொடர்பு சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ . மற்றும் எல்டிஇ என மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2018 நவம்பர் மாத இறுதியில் 117.17 கோடியில் இருந்து டிசம்பர் மாத இறுதியில் 117.6 கோடியாக அதிகரித்து உள்ளது.

அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், டிசம்பர் மாத முடிவில் 85.64 லட்சம் பயனாளர்களை இணைத்து மொத்தமாக எண்ணிக்கை 28.01 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு - டிராய்

இதனை தொடர்ந்து, பி.எஸ்என்.எல் வாடிக்கையாளர் டிசம்பர் மாத முடிவில் எண்ணிக்கை 5.56 லட்சம் இணைக்கப்பட்டு, மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 11.4 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் டெலிகாம் சந்தையில், வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 23.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.87 கோடியாக உள்ளது. ஆனாலும் தொடர்ந்து இந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்றது. ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34.03 கோடியாக இருக்கிறது. இந்நிறுவனம் சுமார் 15.01 லட்சம் வாடிக்கையாளர்களை டிசம்பர் 2018-ல் இழந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய லேண்ட்லைன் நிறுவனமான, பி.எஸ்.என்.எல் கடந்த 2018 நவம்பரில் 2.19 கோடியாக இருந்த எண்ணிக்கை டிசம்பர் 2018-ல் 2.18 கோடியாக சரிவடைந்துள்ளது.

மொபைல் டேட்டா பயனாளர்கள்

இந்தியாவின் மொத்த பிராட்பேண்ட் சந்தாதார்கள் எண்ணிக்கை டிசம்பரில் 51.8 கோடியாக உயர்ந்துள்ளது. மொபைல் மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை  49.99 கோடியாகும். கம்பிவழி பிராட்பேண்ட் மூலம் 1.81 கோடியாக உள்ளது.

ஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு - டிராய்

அதிகப்படியான இணையத்தை வழங்கும் நிறுவனமாக ஜியோ 28 கோடி பயனாளர்களுடன், வோடபோன் ஐடியா இரண்டாவது இடத்தில் 10.79 கோடி பயனாளர்களும், ஏர்டெல் சுமார் 10 கோடி பயனாளர்களையும், பிஎஸ்என்எல் 2 கோடி வாடிக்கையாளர்களையும், டாடா டெலிசர்வீஸ் 22.6 லட்சம் பயனாளர்களையும் கொண்டுள்ளது.