இந்தியாவின் முதன்மையான வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனம், மிகப்பெரிய அளவில் அக்டோபர் மாதம் பயனாளர்களை இழந்துள்ளது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ 1.05 கோடி வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துள்ளது.
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் என அழைக்கப்படுகின்ற டிராய் வெளியிட்டுள்ள கடந்த 2018 அக்டோபர் மாத வாடிக்கையாளர் இணைப்பு மற்றும் இழப்பு தொடர்பான அறிக்கையின் விபரம் வெளியிடபட்டுள்ளது. இந்த அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் என இரு நிறுவனங்கள் தான் புதிய வாடிக்கையாளர்களை பெருமளவு இணைத்துள்ளது.
டிராய் வெளியிட்டுள்ள அறிக்கை – அக்டோபர் 2018
இந்திய தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் எண்ணிக்கை 119.14 (செப்டம்பர்) கோடியில் இருந்து 119.20 கோடியாக அக்டோபர் 2018 யில் அதிகரித்துள்ளது. இது ஒரு மாதத்தில் 0.05 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மொத்த தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களில் GSM, CDMA மற்றும் LTE சார்ந்த வயர்லெஸ் பயனாளர்கள் எண்ணிக்கை சந்தாதாரர்கள் எண்ணிக்கை 116.92 (செப்டம்பர்) கோடியில் இருந்து 117 கோடியாக அக்டோபர் 2018 யில் அதிகரித்துள்ளது. இது ஒரு மாதத்தில் 0.06 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
அதிகம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்த நெட்வொர்க்குகள்
1 . ரிலையன்ஸ் ஜியோ – 1.05 கோடி புதிய பயனர்கள்
2 . ரிலையன்ஸ் ஜியோ – 30 லட்சம் புதிய பயனர்கள்
அதிகம் புதிய வாடிக்கையாளர்களை இழந்த நெட்வொர்க்குகள்
1 . வோடபோன் ஐடியா – 73 லட்சம்
2 . ஏர்டெல் – 18 லட்சம்
(மேலே வழங்கப்பட்டுள்ளது செப்டம்பர் 2018 நிலவரம்)
டாப் 4 டெலிகாம் நிறுவனங்கள்
1 . வோடபோன் ஐடியா – 42.76 கோடி
2. ஏர்டெல் டெலிகாம் – 34.16 கோடி
3. ரிலையன்ஸ் ஜியோ – 26.27 கோடி
4. பிஎஸ்என்எல் – 11.34 கோடி
(மேலே வழங்கப்பட்டுள்ளது செப்டம்பர் 2018 நிலவரம்)