jio

சமீபத்தில் ரிலையனஸ் ஜியோ தனது திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் ரூ.1299 பிளானின் வேலிடிட்டியை குறைத்து தற்போது 336 நாட்களாக மட்டும் அறிவித்துள்ளது. ஜியோ இப்போது 365 நாட்கள் வேலிடிட்டி பெற்ற பிளான்களை கொண்டிருக்கவில்லை.

மாதத்திற்கு 28 நாட்களாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கணக்கில் கொண்டுள்ளதால் தனது ரூ.2121 மற்றும் ரூ.1299 பிளான்களின் வேலிடிட்டி காலத்தை 336 நாட்களை மட்டும் வழங்க துவங்கியுள்ளது. எனவே, முன்பாக 365 நாட்களிலிருந்து இப்போது 29 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.

டேட்டா – மொத்தமாக  24 ஜிபி உயர் வேக டேட்டா

அழைப்புகள் – ஜியோ டூ ஜியோ முற்றிலும் இலவசம் , ஜியோ டூ மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு 12,000 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது.

எஸ்எம்எஸ் –3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.

336 நாட்கள் செல்லுபடியாகின்ற இந்த திட்டத்தில் கூடுதல் சலுகையாக ஜியோ ஆப் சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கபட்டுள்ளது. முன்பாக இந்நிறுவனம் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு 14 நாள் வேலிடிட்டி கொண்ட ரூ.49 மற்றும் ரூ.69 பிளானை அறிவித்துள்ளது.