ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற முன்னணி டெல்காம் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பரபரப்பான புகாரினை அளித்துள்ளது.
டெல்காம் உரிமம் ரத்து
புதிய தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ இந்திய தொலை தொடர்பு துறைக்கு அளித்துள்ள புகாரில் அரசுக்கு செலுத்த வேண்டிய நிர்ணயித்த தொகையை விட, குறைவாக செலுத்திய ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளது.
குறைவாக செலுத்திய தொகையின் காரணமாக அரசுக்கு ரூ.400 கோடி வரை வருவாய் இழப்பை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் காலண்டில் அதாவது ஜனவரி முதல் மார்ச் 2017 வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 950 கோடியை உரிமத்துக்கு செலுத்தியுள்ளது. ஆனால் கடந்த அக்டோபர் – டிசம்பர் 2016ல் ரூ. 1,099.5 கோடியை செலுத்தியது. இதன் வாயிலாக ரூ.150 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதோ போன்ற வோடபோன் நிறுவனம் கடந்த கடந்த அக்டோபர் – டிசம்பர் 2016ல் ரூ.746.8 கோடியை செலுத்தியிருந்தது, ஆனால் ஜனவரி முதல் மார்ச் 2017 வரையிலான காலகட்டத்தில் ரூ.550 கோடி மட்டுமே செலுத்தியதால் ரூ. 200 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு தொலைதொடர்பு நிறுவனமான ஐடியா ரூ.60 கோடி குறைவாக செலுத்தியுள்ளது.
எனவே, மொத்தம் ரூ.400 கோடி வரை அரசுக் கருவூலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.