மீண்டும் ரிலையன்ஸ் ‘Jio Celebration Pack’ சலுகை 2 ஜிபி இலவச டேட்டா

Jio Celebration Pack :- முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ செலிபிரேஷன் பேக் என்ற பெயரில் 2 ஜிபி கூடுதல் டேட்டா நன்மையை தொடர்ந்து பல்வேறு பயனாளர்களுக்கு வழங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

பொதுவாக 5 நாட்களுக்கு வழங்குப்படும் ஜியோ செலிபிரேஷன் பேக் இந்த முறை 4 நாட்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஜியோ செலிபிரேஷன் பேக் பெறுவது எப்படி ?

பொதுவாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பல்வேறு சலுகைகள், குறைந்த விலை டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்கும் காரணத்தால் குறைந்த நாட்களில் 28 கோடிக்கு மேற்பட்ட பயனாளர்களை 4ஜி தொலைத்தொடர்பு முறையில் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாகவும், மொபைல் டேட்டா வழங்குவதில் முதன்மையான நிறுவனமாக விளங்கி வருகின்றது.

பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு மாறுபட்ட தருனத்தில் ரிலையன்ஸ் ஜியோ செலிபிரேஷன் பேக் வழங்கபட்டு வருகின்றது. குறிப்பாக ஒரு சில பயனாளர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பாக வந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த சலுகை நான்கு நாட்களுக்கு மட்டும் தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தமாக 8 ஜிபி அளவு டேட்டா பலனை இலவசமாக ஜியோ வழங்குகின்றது.

மீண்டும் ரிலையன்ஸ் ‘Jio Celebration Pack’ சலுகை 2 ஜிபி இலவச டேட்டா

இந்த சலுகை தொடர்ந்து சில பயனாளர்களுகு தற்போதும் கிடைக்க உள்ளதாக குறிப்பிடப்படகின்றது. இதனை பெற தினசரி டேட்டா பயனை கடந்த பிறகு, உங்கள் MyJio ஆப் திறந்து அதனுள்ள வரிசசைப்படுத்தப்பட்டுள்ள My Plans என்ற தேர்வினை செய்தால் Jio Celebration Pack என்ற ஆட்-ஆன் சலுகை இடம்பெற்றிருக்கும். இதனை ஏக்டிவேட் செய்துக் கொள்ளலாம்.

update :-

ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா வரம்பை கடந்த பிறகு 1299 என்ற எண்ணுக்கு அழைத்தால் இலவச ஜியோ செலிபிரேஷன் பேக் உறுதி செய்யப்பட்டு எஸ்எம்எஸ் வாயிலாக கிடைக்கப் பெறலாம்.

மேலும் படிங்க – ஜியோ பிரைம் ரீசார்ஜ் நிறைவடைகிறதா ?