ஆர்காம் நஷ்டத்தை ஈடுகட்ட களமிறங்கிய ஆர்ஜியோ.!ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான அனில் திருபாய் அம்பானி அவர்களின் 85 வது பிறந்த நாளில் வெளியான அறிவிப்பு தொலைத்தொடர்பு துறையில் மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அனில் அம்பானியின் தலைமையின் கீழ் ரிலை­யன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சொத்­துக்­களை 25 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு கைய­கப்­படுத்துவதாக முகேஷ் அம்­பானி தெரி­வித்­துள்ளார்.

ஆர்காம் டெலிகாம்

ஆர்காம் நஷ்டத்தை ஈடுகட்ட களமிறங்கிய ஆர்ஜியோ.!

இந்தியாவின் மிக வேகமான வளர்ந்து வரும் 4ஜி நெட்வொர்க்கான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முகேஷ் அம்பானி கட்டுபாட்டில் இயங்கி வருகின்றது. இவருடைய தம்பி அனில் அம்பானி கீழ் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ.45,000 கோடி நஷ்டத்தை அடைந்துள்ளதை தொடர்ந்து மிகுந்த சிக்கலை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு தொலைத் தொடர்பு துறையில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறு­வ­னத்­தின், 122.4 மெகா­ஹெர்ட்ஸ், ‘4ஜி’ அகண்ட அலை­வ­ரிசை, 43,000 தொலை­தொ­டர்பு கோபு­ரங்­கள், 1.78 லட்சம் கிமீ கண்­ணாடி நாரிழை கம்­பி­வட ஒருங்­கி­ணைப்பு வசதி, 248 ஊடக சேவை ஒருங்­கி­ணைப்பு முனை­யங்­கள் உள்­ளிட்ட சொத்­துக்­கள் ஆகியவை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வசம் கைமாற உள்ளது.

திவால் நடவடிக்கையை தடுக்கும் நோக்கில் முகேஷ் அம்பானியின் இந்த நடவடிக்கை டெலிகாம் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என சி.ஓ.ஏ.ஐ., டைரக்­டர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here