Jio: 10 ஜிபி இலவச ஜியோ செலிபிரேஷன் பேக் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ஜியோ பிரைம் பயனாளர்களுக்கு 10 ஜிபி இலவச டேட்டாவை ‘ ஜியோ செலிபிரேஷன் பேக் ‘ குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் வழங்குகின்றது. கூடுதல் டேட்டாவை பெறுவது எப்படி ?

ஜியோ செலிபிரேஷன் பேக்

Jio: 10 ஜிபி இலவச ஜியோ செலிபிரேஷன் பேக் அறிமுகம்

குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் என இல்லாமல் பெரும்பாலான பயனர்களுக்கு மாறுபட்ட வகையில் கிடைக்கின்ற இந்த சிறப்பு சலுகை பேக் ஜனவரி 26 முதல் ஜனவரி 30 வரை என குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. மேலும் ஒரு சிலருக்கு ஜனவரி 28 முதல் பிப்ரவரி 1ந் தேதி வரை வழங்குகின்றது.

குறிப்பாக இந்த பேக் பயன்பாட்டில் உள்ள தினசரி டேட்டா அளவை கடந்த பிறகு கூடுதலாக தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தம் 5 நாட்களுக்கு அதாவது ஒட்டுமொத்தமாக 10 ஜிபி டேட்டாவை பெறலாம்.

எவ்வாறு பெறுவது ?

நீங்கள் ரூ.198 பிளானில் உள்ளீர்கள் என்றால், உங்களுடைய தினசரி டேட்டா வரம்பு 2 ஜிபி டேட்டா ஆகும். அதன் பிறகு வேகம் 64 Kbps என குறைக்கப்படும். ஆனால் வேகம் குறைக்கப்படாமல் கூடுதலாக 2 ஜிபி டேட்டா தரவை உயர்வேகத்தில் பெறலாம். இந்த சலுகை 5 நாட்கள் மட்டும் கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

தினசரி டேட்டா பயனை கடந்த பிறகு, உங்கள் MyJio ஆப் திறந்து அதனுள்ள வரிசசைப்படுத்தப்பட்டுள்ள My Plans என்ற தேர்வினை செய்தால் Jio Celebration Pack என்ற ஆட்-ஆன் சலுகை இடம்பெற்றிருக்கும். இதனை ஏக்டிவேட் செய்துக் கொள்ளலாம்.

Jio: 10 ஜிபி இலவச ஜியோ செலிபிரேஷன் பேக் அறிமுகம்

சமீபத்தில் இந்நிறுவனம், தனது ஜியோ போன் பயனாளர்களுக்கு 6 மாதம் செல்லுபடியாகின்ற ரூ. 594 மற்றும் மூன்று மாதம் செல்லுபடியாகின்ற ரூ.297 பிளானில் மொத்தம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகின்றது. இந்த பிளான் பிரேத்தியேகமாக ஜியோ போன் பயனாளர்களுக்கு மட்டும் ஆகும்.

Jio: 10 ஜிபி இலவச ஜியோ செலிபிரேஷன் பேக் அறிமுகம்