mobile phone tower

டிராய் வெளியிட்டுள்ள மார்ச் 2019 4ஜி இணைய வேகம் தொடர்பான ஆய்வில், ரிலையன்ஸ் ஜியோ அதிகபட்சமாக 22.2Mbps வேகத்தினை வழங்கி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

4ஜி அப்லோலடு வேகத்தில் வோடபோன் நிறுவனம், அதிகபட்சமாக 6Mbps வேகத்தினை வழங்கியுள்ளது. வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வந்தாலும், டிராய் இருநிறுவனங்களின் இணைய வேக விவரங்களை தனியாகவே வெளியிட்டிருக்கிறது.

இணைய வேக அறிக்கை மாரச் -2019

பிப்ரவரி 2019 இல் ரிலையன்ஸ் ஜியோ 20.9Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்கியிருந்த நிலையில் மார்ச் மாதத்தில் இணைய வேகம் 22.2Mbps அதிகரித்திருக்கிறது. எனவே, தொடர்ந்து இந்தியாவில் 4ஜி வேகத்தை வழங்குவதில் ஜியோ முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி  தரவிறக்க வேகத்தில் மார்ச் மாதத்தில் டேட்டா வேகம் 9.3Mbps ஆக இருந்தது. ஆனால் பிப்ரவரியில் 9.4Mbps ஆக இருந்தது குறிப்பிடதக்கதாகும்.

சராசரி 4ஜி தரவிறக்க வேகம் மார்ச் மாதத்தில் வோடபோன் 7Mbps ஆக இருந்தது.  பிப்ரவரி மாதத்தில் முறையே 6.8Mbps ஆக இருந்தது. ஐடியா நிறுவனம் மார்ச் மாதத்தில் 5.6Mbps வேகம் வழங்கியிருக்கிறது. பிப்ரவரி 5.7Mbps வேகம் வழங்கியிருக்கின்றது.

டெலிகாம் டவுன்லோடு அப்லோடு
ஜியோ 22.2Mbps 4.6Mbps
ஏர்டெல் 9.3Mbps 3.6Mbps
வோடபோன் 9.3Mbps 6Mbps
ஐடியா 5.6Mbps 5.5Mbps

அப்லோடு வேகத்தில் வோடபோன் முதலிடம்

கடந்த மார்ச் 2019-ல் வோடபோன் அப்லோடு வேகம் 6Mbps ஆக இருந்தது. ஐடியா அப்லோடு வேகம் 5.5Mbps, மூன்றாவது இடத்தில் ஜியோ அப்லோடு வேகம் 4.6Mbps ஆக பதிவு செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் 3.6Mbps ஆக இருந்தது.