Reliance Jio crosses 300 million customers

இந்தியாவின் தொலைத் தொடர்பு துறையில், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை 30 கோடியை கடந்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தை அடுத்த சில மாதங்களில் பின்னுக்கு தள்ளி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்க உள்ளது.

கடந்த செப்டம்பர் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜியோ கடந்த இரண்டரை ஆண்டுகளில் 30 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஆனால் ஏர்டெல் தொடங்கப்பட்டு 19 ஆண்டுகளுக்கு பிறகே 30 கோடி பயனாளர்களை கடந்த ஜனவரி 2019-யின் இறுதியில் பெற்றது.

ரிலையன்ஸ் ஜியோ சாதனை

தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2019 போட்டிகளில் ஜியோ ஒளிபரப்பும் விளம்பரங்களில் ஜியோ பயனாளர்கள் எண்ணிக்கை 300 மில்லியன் ( ‘Celebrating 300 million users’) தொட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜியோ வர்த்தகரீதியான சேவை தொடங்கிய 170 நாட்களில் 10 கோடி பயனாளர்களை பெற்று உலகின் மிக வேகமாக வளரும் டெலிகாம் நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதி காலண்டின் முடிவில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 28.4 கோடி பயனாளர்களை பெற்றிருந்தது.

அதன் பிறகு ஏர்டெல் பகிர்ந்த தகவலின் படி ஜனவரி 2019 இறுதியில் 30.4 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. ஏர்டெல் தொடங்கப்பட்டு 19 ஆண்டுகளுக்கு பிறகு 30 கோடி பயனாளர்கள் எண்ணிக்கையை கடந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 30 கோடி வாடிக்கையாளர்களை பெற்றது

ஆனால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டு 2 வருடம் 6 மாதங்களுக்குள் 30 கோடி பயனாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து இந்தியாவின் முதன்மையான தொலைத் தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா , 40 கோடிக்கு மேற்பட்ட பயனாளர்களை பெற்றுள்ளது.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிதாக ஜியோநியூஸ் சேவையை தொடங்கியுள்ளது.