ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்

இந்தியாவின் முன்னணி தொலை தொடர்புத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும், முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில் பிராட்பேன்ட் சேவையை 1100 நகரங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் விலை , வருகை முன்பதிவு உட்பட பல்வேறு முழுவிவரம் அறிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனம் டெலிகாம் துறையில் கால் பதித்த 22 மாதங்களில் 21.5 கோடி வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்குகின்ற நிலையில், கூடுதலாக ஃபீச்சர் ரக ஜியோபோன், ஜியோ ஜிகா ஃபைபர், ஜியோ ஜிகா டிவி செட் -டாப் பாக்ஸ் என பல்வேறு சேவைகளை அடுத்த சில வாரங்களில் தொடங்க உள்ளதாக சமீபத்தில் ரிலையன்ஸ் சார்பாக நடைபெற்ற 42 வது ஆண்டு வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் அம்பானி அறிவித்திருத்தார்.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்

ஜியோ ஜிகா ஃபைபர்

வருகின்ற ஆகஸ்ட் 15, 2018 முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகப்படியான முன்பதிவு பெறும் வட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேவையில் முதற்கட்டமாக நவம்பர் மாத தொடக்க வாரங்களில் 10 முதல் 15 முன்னணி நகரங்களில் ஃபைபர் டூ தி ஹோம் சேவையை ஜியோ இன்ஃபோகாம் தொடங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்

100Mbps வேகத்தை அடிப்படையாக கொண்டு குறைந்தபட்சம் 100 ஜிபி டேட்டா கொண்டு ரூ.500 முதல் ரூ. 700 விலைக்குள் தொடங்கப்பட உள்ள ஃபைபர் பிராட்பேண்ட் சார்ந்த சேவைகளுக்கு தொடக்க நிலை சலுகையாக சில மாதங்களுக்கு குறைந்ந கட்டணம் அல்லது முற்றிலும் இலவசமாக இந்த சேவை தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜூலை 5-ஆம் தேதி நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜிகா ஃபைபர் பிராட்பேன்ட் சேவை குறித்து வெளியிட்ட அறிக்கையில், 1100 நகரங்களில் சுமார் 5 கோடி வீடுகளுக்கு பிராட்பேன்ட் சேவைகளை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்

மேலும் ஜிகா டிவி செட் டாப் பாக்ஸ் வாயிலாக எண்ணற்ற தொலைக்காட்சி சேவைகள், மற்றும் ஜியோ டிவி காலிங் என்ற முறையின் வாயிலாக ஜியோ ஜிகா டிவி செட்டாப் பாக்ஸ் பொருத்தப்பட்ட டிவி, மொபைல், டெப்ளெட்கறளுக்கு வீடியோ கால் மேற்கொள்ளலாம். தற்போதைய பிராட்பேன்ட் மற்றும் செட்-டாப் பாக்ஸ் சலுகைகளின் விலையை விட ஜிகாஃபைபர் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என ஜெ.பி. மார்கன் ஸ்டான்லி தெரிவித்து இருக்கிறார்.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்