Reliance Jio

விரைவில்., தொடங்கப்பட உள்ள ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்டு சேவையின் பாதுகாப்பு வைப்பு நிதி கட்டணம் ரூபாய் 2,500 ஆக குறைக்கப்படுள்ளது. முன்பாக ரூபாய் 4,500 வசூலிக்கப்பட்டு வந்தது.

4ஜி சேவை வழங்குவதில் முன்னணி வகிக்கின்ற ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவையில் மிகப்பெரிய பங்களிப்பினை வழங்க நாடு முழுவதும் கம்பி வழி இணைய சேவையை ஜிகா ஃபைபர் என்ற பெயரில் தற்போது சோதனை செய்து வருகின்றது. பல்வேறு முன்னணி நகரங்களில் அடுத்த சில மாதங்களுக்குள் இந்த இணைய சேவை செயல்பட உள்ளது.

ஜியோ ஜிகா ஃபைபர் பிளான்

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ள ஜியோ ஜிகா ஃபைபர் சேவையில் முன்பாக ரூ.4,500 பாதுகாப்பு வைப்பு தொகை திட்டத்தில் 100Mbps இணைய வேகத்தில் 1,100GB டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள், ஜியோ டிவி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வந்தது. இந்த திட்டத்தில் டூயல் பேன்ட் ரவுட்டர் (2.4GHz மற்றும் 5 GHz) வழங்கப்படது. அதிகப்படியான பயனாளர்களை பெறும் நோக்கில் இரு விதமான முறையில் செயற்படுத்த ரூ.2,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

Reliance Jio

புதிதாக வந்துள்ள ரூ.2,500 பாதுகாப்பு வைப்பு தொகை திட்டத்தில் 50Mbps இணைய வேகத்தில் 1,100GB டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள், ஜியோ டிவி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வந்தது. இந்த திட்டத்தில் சிங்கிள் பேன்ட் ரவுட்டர் வழங்கப்பட உள்ளது.

ஜியோவின் ஜிகா பைபர் பல்வேறு விதமான சலுகைகள் உட்பட இணைய வழியில் ஹெச்டி முறையில் தொலைக்காட்சி சேவையை வழங்குவதற்கு தயாராகி வருகின்றது.