ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், அடுத்த ஜியோ ஜிகா பைபர் சேவையில் மாதந்தோறும் ரூ.600 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகள், 600 டிவி சேனல்கள், லேண்ட்லைன் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட் இணைப்பினை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் இந்த ஏவையில் கூடுதலாக ஸ்மார்ட் ஹோம் வசதி உட்பட 40 கருவிகளை வை-ஃபை மூலம் இணைக்க ரூ. 1000 கட்டணமாக வசூலிக்கப்படலாம் என லைவ்மின்ட் குறிப்பிட்டுள்ளது.

ஜியோ ஜிகா பைபர் ரீசார்ஜ் ஆஃபர்

கடந்த ஆக்ஸ்ட் மாதம் முதல் பல்வேறு முன்னணி நகரங்களில் பிராட்பேண்ட் சேவை சார்ந்த ஜிகா ஃபைபர் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 1600க்கு மேற்பட்ட நகரங்களில் இந்த சேவையை ரிலையன்ஸ் தொடங்க உள்ளது.

ரூ.600க்கு ஜியோ ஜிகா பைபர் மூலம் 600 டிவி சேனல்கள், பிராட்பேண்ட்..,

பல்வேறு முன்னணி நகரங்களில் ரூ.4,500 பாதுகாப்பு வைப்பு நிதியாக கொண்டு கட்டணம் செலுத்தியவர்களுக்கு ஜியோ ஜிகா ஃபைபர் சேவையின் மூலம் 100 ஜிபி டேட்டா தற்போது இலவசமாக வழங்கப்பட்டு 100 Mbps வேகத்தில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம்,

ரூபாய் 600 மாதந்திர கட்டணமாக வசூலிக்கப்பட்டு லேண்ட்லைன் இணைப்பு, பிராட்பேண்ட், வரம்பற்ற முறையில் இலவச கால்கள் மற்றும் 600 டிவி சேனல்கள் பெற வழி வகுக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் கூடுதலாக ஸ்மார்ட் ஹோம் சார்ந்த அம்சத்தை பெறுவதற்கு மாதந்தோறும் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.  ONT (Optical Network Terminal)  வாயிலாக ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, மற்றும் ஸ்மார்ட் கருவிகள் என 40 முதல் 45 கருவிகளை வை-ஃபை வாயிலாக இணைக்கலாம்.

ரூ.600க்கு ஜியோ ஜிகா பைபர் மூலம் 600 டிவி சேனல்கள், பிராட்பேண்ட்..,

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் இணைய வேகம் 100 Mbps முதல் அதிகபட்சமாக 1 Gbps வரை பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.600க்கு ஜியோ ஜிகா பைபர் மூலம் 600 டிவி சேனல்கள், பிராட்பேண்ட்..,