அன்லிமிடேட் ஜியோ அழைப்புகள் துண்டிக்கப்படுமா ? 5 புதிய வாய்ஸ் ஆட்-ஆன் பேக் அறிமுகம்வரம்பற்ற அழைப்புகள் மற்றும் டேட்டா என போட்டியாளர்களை கதி கலங்க வைத்த ஜியோ நிறுவனம் தற்போது 5 புதிய வாய்ஸ் ஆட்-ஆன் திட்டங்களை அறிவித்துள்ளது.

ஜியோ வாய்ஸ் ஆட்-ஆன் பேக்

அன்லிமிடேட் ஜியோ அழைப்புகள் துண்டிக்கப்படுமா ? 5 புதிய வாய்ஸ் ஆட்-ஆன் பேக் அறிமுகம்

பொதுவாக தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்குகின்ற அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை அடிப்படையாக இணைத்துள்ள நிலையில், டேட்டா திட்டங்கள் மட்டும் ரீசார்ஜ் தொகைக்கு ஏற்ற வகையில் மாறும் என்பதனை ஜியோ சிம் பயனாளர்கள் அறிந்திருப்பீர்கள்.

முந்தைய ஆட்-ஆன் பேக்குகள் டேட்டா சலுகைகள் மட்டுமே அடிப்படையாக கொண்டிருந்தது. குறிப்பாக ரூ.201 திட்டத்தில் 5ஜிபி கூடுதல் தரவுகளும், ரூ. 301 திட்டத்தில் 10ஜிபி கூடுதல் தரவுகளும் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது புதிதாக ரூ.11, ரூ.51 மற்றும் ரூ.91 ஆகிய மூன்று திட்டங்கள் பயன்பாட்டிற்கு வந்திருப்பதனை தொடர்ந்து ரூ.201 மற்றும் ரூ.301 ஆகிய திட்டங்களில் வாய்ஸ் அழைப்புகள் என வரையறுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் மற்ற பிளான்களிலும் நடைமுறைக்கு வருமா என்பது உறுதியாகவில்லை.

அன்லிமிடேட் ஜியோ அழைப்புகள் துண்டிக்கப்படுமா ? 5 புதிய வாய்ஸ் ஆட்-ஆன் பேக் அறிமுகம்

ஜியோ ஆட்-ஆன்

ரூ..11 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்தால் 35 நிமிட இலவச அழைப்புகள், 100MB கூடுதல் டேட்டா வழங்குகின்றது. வேலிடிட்டி பயன்பாட்டில் உள்ள பிளான் அடிப்படையாகும்.

ரூ.51 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்தால் 175 நிமிட இலவச அழைப்புகள், 1GB கூடுதல் டேட்டா வழங்குகின்றது. வேலிடிட்டி பயன்பாட்டில் உள்ள பிளான் அடிப்படையாகும்.

ரூ.91 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்தால் 325 நிமிட இலவச அழைப்புகள், 2GB கூடுதல் டேட்டா வழங்குகின்றது. வேலிடிட்டி பயன்பாட்டில் உள்ள பிளான் அடிப்படையாகும்.

ரூ.201 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்தால் 725 நிமிட இலவச அழைப்புகள், 5GB கூடுதல் டேட்டா வழங்குகின்றது. வேலிடிட்டி பயன்பாட்டில் உள்ள பிளான் அடிப்படையாகும்.

ரூ.301 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்தால் 1000 நிமிட இலவச அழைப்புகள், 10GB கூடுதல் டேட்டா வழங்குகின்றது. வேலிடிட்டி பயன்பாட்டில் உள்ள பிளான் அடிப்படையாகும்.

அன்லிமிடேட் ஜியோ அழைப்புகள் துண்டிக்கப்படுமா ? 5 புதிய வாய்ஸ் ஆட்-ஆன் பேக் அறிமுகம்

இந்நிறுவனத்தின் பொதுவான அனைத்து திட்டங்களும் ஒரு நாள் முதல் 84 நாட்கள் வரையில் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வரும் நிலையில், இவையனைத்திலும் முழு இலவச அழைப்புகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆட்-ஆன் திட்டங்களில் அழைப்புகள் வரையறைக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் ஜியோ 4ஜி வாய்ஸ் அழைப்புகளை வரையறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தொலைத்தொடர்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிறுவனத்தின் ரூ.1500 நிகர மதிப்பிலான அடிப்படையில் இலவசம் என கருதப்படுகின்ற ஜியோபோன் டெலிவரி அடுத்த சில நாட்களில் டெலிவரி தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.அன்லிமிடேட் ஜியோ அழைப்புகள் துண்டிக்கப்படுமா ? 5 புதிய வாய்ஸ் ஆட்-ஆன் பேக் அறிமுகம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here