ஜியோ

இந்தியாவின் மிகப்பெரிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கபடும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் , முதன்முறை சலுகையாக 30 நிமிடம் இலவசமாக மற்ற நெட்வொர்க் அழைப்புகளை மேற்கொள்ள வழி வகுத்துள்ளது.

“ஜியோ வாடிக்கையாளர்கள் முதல் முறையாக தங்கள் எண்ணிற்கு IUC ரீசார்ஜ் செய்யும் போது 30 நிமிடங்கள் இலவச டாக் டைம் கிடைக்கும். தானாகவே ரீசார்ஜ் செய்த நாளிலிருந்து முதல் ஏழு நாட்களுக்கு மட்டும் இந்த ஒரு முறை சலுகை கிடைக்கும், ”என்று ET அறிக்கையில் தெரிய வந்துள்ளது. “இது சந்தாதாரர்களுக்கு ஒரு சுமூகமான முறையில் கட்டண சேவையின் மாற்றத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது”

நெட்வொர்க் இணைப்பு கட்டணங்கள் அல்லது ஒன்றோடொன்று பயன்பாட்டு கட்டணங்கள் (ஐ.யூ.சி) காரணமாக ரூ .13,500 கோடியை செலுத்த வேண்டி உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் வெளிப்படுத்தியது. இதன் காரணமாகவே இந்நிறுவனம், IUC டாப் அப் ரீசார்ஜ் பிளான்களை அறிவித்தது. அதேவேளை ஜியோ டூ ஜியோ அழைப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ஜியோ IUC டாப் அப் கட்டணம் மற்றும் சலுகைகள்

ரூ.10 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 124 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.20 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 249 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 656 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.100 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1362 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.500 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 7,012 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 14074 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை உங்களுக்கு டேட்டா மற்றும் ஜியோ டூ ஜியோ அழைப்புகள் மட்டும் போதும் என்றால் நீங்கள் கூடுதல் டாப் அப் செய்ய தேவையில்லை.  ஒவ்வொரு ரூ. 10 ஐயூசி கட்டணத்தை பயன்படுத்தினால் 1ஜிபி கூடுதல் டேட்டா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் 1000 ரூபாய் பயன்படுத்தினால் 100 ஜிபி டேட்டா வழங்கப்படலாம்.

 

இலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி ?