இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்குநராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஃபீச்சர் ரக 4ஜி மொபைல் போன் ஜியோபோன் மொபைலுக்கு ரூ.49 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 1ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோபோன்

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிக சவாலான விலையில் 4ஜி ஃபீச்சர் ரக மொபைலை ரூ.1500 மதிப்பிலான இலவச ஜியோபோன் முதற்கட்ட முன்பதிவில் 60 லட்சத்துக்கு மேற்பட்ட ஆர்டர்களை பெற்றிருக்கலாம் என தகவல் வெளியானது.

ஆரம்பத்தில் ரூ.153 டேட்டா பிளானை அறிமுகம் செய்திருந்த ஜியோபோன் பிளானுக்கு நாள் ஒன்றுக்கு 1ஜிபி உயர்வேக 4ஜி டேட்டா அதன் பிறகு 64Kbps வேகத்தில் டேட்டாவை அனுக இயலும், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் , தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுதவிர, ரூ.11,  ரூ.21 ரூ.51 மற்றும் ரூ.101 கட்டணத்தில் ஜியோபோன்  மாடல்களுக்கு சிறப்பு டேட்டா பேக்குகளை செயற்படுத்தி வந்த நிலையில், போட்டியாளர்களை கதிகலங்க வைக்கும் நிலையில் ரூ.49 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 1ஜிபி டேட்டா போன்றவற்றை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் வரை முடிந்த காலாண்டில்,இந்தியாவின் முதன்மையான ஃபீச்சர் போன் தயாரிப்பாளர் என்ற பெருமையை ரிலையன்ஸ் ஜியோ பெற்றுள்ளது. இதன் மூலம் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் ரூ.2000 க்கு குறைந்த விலை கொண்ட மொபைல் சந்தையில் 27 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது.