ரிலையன்ஸ் ஜியோ : ஐபிஎல் 2018 பரிசுகள் மற்றும் டேட்டா சலுகை விபரம்

வருகின்ற ஏப்ரல் 7ந் தேதி முதல் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு முன்னணி 4ஜி நொட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ. 251 கட்டணத்தில் 51 நாட்களுக்கு 102 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குவதுடன் கிரிக்கெட்டை முன்னிட்டு பல்வேறு Cricket Play Along பரிசு போட்டி மற்றும் Jio Dhana Dhan LIVE என்ற காமெடி ஷோ ஆகியவற்றை அறிவித்துள்ளது.

ஜியோ தன் தனா தன் லைவ்

ரிலையன்ஸ் ஜியோ : ஐபிஎல் 2018 பரிசுகள் மற்றும் டேட்டா சலுகை விபரம்

ஜியோ நிறுவனம், ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகளுடன், மும்பையில் ஒரு வீடு, 25 கார்கள் உட்பட பல்வேறு பண பரிசுகள் என பலவற்றை 7 வாரங்களில் அதாவது 60 போட்டிகளில் வழங்க உள்ளது.

மை ஜியோ ஆப் (MyJio app) வாயிலாக நடைபெற உள்ள பரிசு திருவிழாவில் 11 மொழிகளில் வழங்கப்பட உள்ளது. இவற்றில் பங்கேற்கும் ஜியோ பயனாளர்களுக்கு மும்பையில் ஒரு வீடு, 25 இலவச கார்கள் உட்பட பல்வேறு பரிசுகளை வழங்க உள்ளது.  இதை தவிர ஜியோ தன் தனா தன் லைவ் என்ற பெயரில் காமெடி ஷோவை வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இந்த ஷோவில் ஷில்பா ஷிண்டே, அலி ஆஸ்கார், சுகந்த மிஸ்ரா, சுரேஷ் மேனன், பரேஷ் கணத்ரா, ஷிபானி டண்டேகர் மற்றும் அர்ச்சனா விஜய். கபில்தேவ் மற்றும் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் சிறப்பு டேட்டா திட்டமாக 51 நாட்கள் செல்லுபடியாகும் வகையிலான ரூ.251 கட்டணத்திலான திட்டத்தில் 102ஜிபி டேட்டா வழங்குகின்றது.

எங்களை ஃபேஸ்புக்கில் விரும்ப

1 COMMENT

Comments are closed.